யாழ். மாவட்டத்தில் பொலிஸாரிடம் மாவட்ட செயலாளர் முன்வைத்துள்ள கோரிக்கை (Photo)

Sri Lanka Police Jaffna Sri Lanka Sri Lanka Fuel Crisis
By Theepan Aug 03, 2022 07:43 AM GMT
Report

யாழ். மாவட்டத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களில் சுமூகமாக எரிபொருளை விநியோகிப்பதற்கு பொலிஸார் ஒத்துழைத்து வழங்க வேண்டும் என மாவட்ட செயலாளர் மகேசன், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் பிரியந்த லியனகேவிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.

யாழ். மாவட்ட செயலாளர் தலைமையில் நேற்று முன் தினம் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது இந்த கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது. 

அந்த கலந்துரையாடலில் மேலும், எரிபொருள் வரிசையில் இடம்பிடித்து வைத்தல், வரிசையில் மூன்று நாட்களுக்கு முன்னமே காத்திருந்து வாகனங்களை நிறுத்துவது போன்றவற்றை மக்கள் தவிர்க்க வேண்டும்.

யாழ். மாவட்டத்தில் பொலிஸாரிடம் மாவட்ட செயலாளர் முன்வைத்துள்ள கோரிக்கை (Photo) | Fuel Supply Request Topriyantha Fuel Supply

இறக்குமதி செய்யப்பட்டுள்ள டீசல் இறக்கும் நடவடிக்கைகள் ஆரம்பம்

பொலிஸாரிடம் கோரிக்கை

முதல் நாளே எரிபொருள் வரிசையில் நிற்பவர்களை அப்புறப்படுத்த பொலிஸாரிடம் கோரிக்கை விடுத்துள்ளோம். பொதுமக்களுக்கென ஒரு வரிசை, பெண்களுக்கென ஒரு வரிசை, உத்தியோகத்தர்களுக்கென ஒரு வரிசை என ஒழுங்கு முறையை ஏற்படுத்தி செயற்பட வலியுறுத்தி இருக்கின்றோம்.

அதனை நடைமுறைப்படுத்துவது எரிபொருள் நிரப்பு நிலைய முகாமைத்துவத்தின் கடமையாகும். இதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்.

எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இரவு நேரங்களின் போது பல துஷ்பிரயோகங்கள் இடம்பெறுவதாக அறிக்கையிடப்பட்டு இருக்கின்றது. இதன் காரணமாக இரவு நேரத்தில் எரிபொருள் நிரப்பு நிலையங்களை இயக்குவதில்லை என்று தீர்மானிக்கப்பட்டது.

எரிபொருள் நிரப்பு நிலையம்

இருந்தபோதும் பலதரப்பட்ட காரணங்களின் நிமித்தம் பிரதேச செயலகத்தினரும், எரிபொருள் நிரப்பு நிலைய முகாமையாளர்களும், பொலிஸாரும் இணைந்து நிலைமைக்கேற்ற வகையில் எரிபொருள் நிரப்பு நிலையத்தை மூடுவது பற்றி தீர்மானிக்க முடியும்.

யாழ். மாவட்டத்தில் பொலிஸாரிடம் மாவட்ட செயலாளர் முன்வைத்துள்ள கோரிக்கை (Photo) | Fuel Supply Request Topriyantha Fuel Supply

மாலை 5 மணிக்கு பின்னர் எரிபொருள் கிடைக்குமாக இருந்தால் அதனை மறுநாள் விநியோகிப்பதற்கு ஆலோசனை வழங்கப்பட்டது. அதற்கான முடிவும் பிரதேச செயலக மட்டத்தில் சூழ்நிலையை கருத்திற்கொண்டு தீர்மானிக்க முடிவு செய்யப்பட்டது. சட்டவிரோத செயல்களை தவிர்த்து அனைவருக்கும் எரிபொருள் கிடைக்க செயற்பட வேண்டும்.

அதிகளவு மோட்டார் வாகனங்கள் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு உள்ளே இருப்பதால் தேவையற்ற முரண்பாடுகள் ஏற்படுகின்றன.

ஏனைய வாகனங்கள்

யாழ். மாவட்டத்தில் பொலிஸாரிடம் மாவட்ட செயலாளர் முன்வைத்துள்ள கோரிக்கை (Photo) | Fuel Supply Request Topriyantha Fuel Supply

அதனால் எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பணிபுரிகின்ற ஊழியர்களின் மோட்டார் வண்டிகளைத் தவிர தரித்து நிற்கும் ஏனைய வாகனங்களை உடனடியாக அப்புறப்படுத்துமாறு மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபரிடம் கோரியிருக்கின்றோம் என தெரிவித்துள்ளார்.

இந்த கலந்துரையாடலில் யாழ். மாவட்ட செயலர் க.மகேசன், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், யாழ். மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர், இலங்கை போக்குவரத்து சபையின் வட பிராந்திய முகாமையாளர், இலங்கை எரிபொருள் கூட்டுத்தாபன வடபிராந்திய முகாமையாளர், எரிபொருள் நிரப்புநிலைய உரிமையாளர்கள் முகாமையாளர்கள் எனப் பலரும் கலந்து கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி
13ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பழை, Lengerich, Germany

06 Apr, 2025
7ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு குறிகட்டுவான், செட்டிக்குளம்

05 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

நாரந்தனை, கொழும்பு, வவுனியா

07 Apr, 2025
மரண அறிவித்தல்
7ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டக்களப்பு, மன்னார், கனடா, Canada

08 Apr, 2019
1ம் ஆண்டு நினைவஞ்சலி

பொகவந்தலாவை, திருகோணமலை, Brampton, Canada

05 Apr, 2025
14ம் ஆண்டு நினைவஞ்சலி

ஆனைக்கோட்டை, Catford, United Kingdom

06 Apr, 2012
5ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, முரசுமோட்டை

01 Apr, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்றுறை, Biel/Bienne, Switzerland, கொழும்பு, யாழ்ப்பாணம், வேலணை

17 Mar, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், கொட்டாஞ்சேனை

05 Apr, 2025
மரண அறிவித்தல்

கரம்பொன் தெற்கு, Toronto, Canada

02 Apr, 2026
மரண அறிவித்தல்

சிறுப்பிட்டி தெற்கு, Cazis, Switzerland, இருபாலை

31 Mar, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

இருபாலை, Swansea, United Kingdom

04 Mar, 2026
மரண அறிவித்தல்

மல்லாகம், Savigny-le-Temple, France

29 Mar, 2026
மரண அறிவித்தல்

காரைநகர், Stanmore, United Kingdom

28 Mar, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US