எரிபொருள் விநியோகம் தொடர்பில் அமைச்சர் விடுத்துள்ள முக்கிய அறிவிப்பு
நாடளாவிய ரீதியில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் தட்டுப்பாடு இன்றி எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும் என மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அமைச்சர் தனது டுவிட்டர் பதிவில் இது தொடர்பில் கூறியுள்ளார்.
கடந்த 10 நாட்களில் எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் ஓர்டர்கள் எவ்வாறு விநியோகிக்கப்பட்டன என்பது தொடர்பிலும் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.
தட்டுப்பாடு இன்றி எரிபொருள் விநியோகம்
அதில், தற்போது நாடளாவிய ரீதியில் உள்ள அனைத்து எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கும் போதுமான எரிபொருள் இருப்புக்கள் விநியோகிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், நாளாந்த எரிபொருள் விநியோக நடவடிக்கைகள் வழமை போன்று இடம்பெற்று வருகின்றது.
நாடளாவிய ரீதியில் உள்ள ஒவ்வொரு நிரப்பு நிலையங்களிலும் தட்டுப்பாடு இன்றி எரிபொருளைப் பெற்றுக் கொள்ள முடியும் எனவும் அமைச்சர் கஞ்சன விஜேசேகர சுட்டிக்காட்டியுள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |