மண்ணெண்ணெய் விநியோகம் முற்றாக தடைப்பட்டுள்ளதால் பலர் பாதிப்பு: எம்.ஏ.சுமந்திரன்
மண்ணெண்ணெய் விநியோகம் முற்றாக தடைப்பட்டிருப்பதால் வடக்கில் கடற்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் தொழில் பாதிப்படைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
ஊடக அறிக்கை ஒன்றில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார்.
அதற்கமைய, கடந்த இரண்டு மாத காலமாக வடக்கில் கடற்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளை நம்பி வாழும் விவசாயிகளும் தமது படகுகள் மற்றும் விவசாய இயந்திரங்களுக்கு தேவையான மண்ணெண்ணையினை பெற்றுக் கொள்ள முடியாது பெரும் சிரமத்துக்கு உள்ளாகுகின்றனர்.
பொருளாதார சிக்கல்
இதன் விளைவாக விவசாய மற்றும் கடலுற்பத்தி மற்றும் அவற்றுடன் தொடர்புடைய நுகர்வு பண்டங்களின் விலை அதிகரித்து காணப்படுவதினாலும் பொதுமக்களின் பல்வேறுவிதமான பிற தேவைகளை பூர்த்தி செய்ய முடியாதும், நடைமுறையின் பொருளாதார சிக்கலுக்கு மத்தியில் மக்கள் பெரும் துயரினை அனுபவிக்கின்றனர்.
வடக்கில் பெரும் பகுதியான குடும்பங்கள் கடற்தொழில் மற்றும் விவசாயத்தினை நம்பி வாழ்வதாலும்
அவர்களின் வாழ்வாதாரம் முற்றிலும் பாதிப்படைந்துள்ள நிலையிலும், அரசாங்கம் மிகவும் விரைவாக
போதுமான அளவிலான மண்ணெண்ணையினை இறக்குமதி செய்து தடையின்றி விநியோகிக்க துரித
நடவடிகைகள் எடுக்க வேண்டும் என பொதுமக்கள், கடற்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் சார்பாக
அவசரமான வேண்டுகோளினை முன்வைக்கின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

ஈழத்தமிழ் அரசியலின் மூத்த தலைவர் மறக்கப்பட்டாரா..! 1 மணி நேரம் முன்

ஒரே ஒரு விளம்பரம் தான்! தமிழ் சினிமாவை கலக்கி கொண்டிருக்கும் இசையமைப்பாளர்.. யார், எப்படி? Cineulagam

விராட் கோலியுடன் தொடர்பு.., ஒரு காலத்தில் பலூன்களை விற்று, ரூ.61,000 கோடி மதிப்புள்ள நிறுவனத்தை உருவாக்கியவர் யார்? News Lankasri

சீனா, பாகிஸ்தானுக்கு கவலை அதிகரிப்பு., இந்திய விமானப்படைக்கு 3 ISTAR விமானங்கள் வாங்க ஒப்புதல் News Lankasri
