எரிபொருளை களஞ்சியப்படுத்திய நான்கு பேர் கைது
அனுமதிப்பத்திரம் இன்றி சட்டவிரோதமாக எரிபொருளை களஞ்சியப்படுத்திய நான்கு சந்தேக நபர்களை பதுளை கந்தகெட்டிய பொலிஸார் கைது செய்துள்ளனர்.
பல்லேவல-பதுளுஓயா -புஸ்ஸகந்த மற்றும் மிகஹாகிமுல பிரதேசங்களில் அனுமதிப்பத்திரமின்றி எரிபொருளை களஞ்சியப்படுத்தி அதிக விலைக்கு விற்பனை செய்ப்படும் 5 இடங்களில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பு தேடுதலில் இந்த சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
சந்தேக நபர்கள் களஞ்சியப்படுத்தி வைத்திருந்த 332 லீட்டர் டீசல், 53 லீட்டர் பெட்ரோல் மற்றும் 237 லீட்டர் மண் எண்ணெய் ஆகியவற்றை கைப்பற்றியுள்ளனர்.
சுற்றிவளைப்பு தேடுதல் நடத்தும் போது ஒரு சந்தேக நபர் தப்பியோடியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
37 முதல் 47 வயதான இந்த சந்தேக நபர்கள் கந்தகெட்டி மற்றும் பூண்டுலோயா பிரதேசங்களை சேர்ந்தவர்கள். பொலிஸ் பிணையில் விடுதலை செய்யப்பட்டுள்ள சந்தேக நபர்களை எதிர்வரும் 29 ஆம் திகதி பதுளை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலையாகுமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.
தப்பியோடிய சந்தேக நபரை கைது செய்ய பொலிஸார் விசாரணைகளை நடத்தி வருகின்றனர்.
தீவிரமடையும் ட்ரம்பின் அடுத்த நகர்வு... டென்மார்க் அதிகாரிகளை சந்திக்கவிருக்கும் ரூபியோ News Lankasri
உங்க படம் வந்தா தான் அது பொங்கல்... விஜய்யின் ஜனநாயகன் ரிலீஸ் தள்ளிப்போனது குறித்து பிரபலங்கள் வருத்தம் Cineulagam