வடமராட்சியில் எரிபொருளுக்கு தட்டுப்பாடு: தனியார் போக்குவரத்து சேவையும் பாதிப்பு (Photos)
வடமராட்சி பிரதேசத்திற்கு உட்பட்ட குஞ்சர்கடை, நெல்லியடி கிராமக்கோடு, பருத்தித்துறை துறைமுகம், மந்திகை ,வல்வெட்டித்துறை ஆகிய பகுதிகளில் உள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் டீசல், பெட்ரோல், மண்ணெண்ணெய் ஆகியவற்றிற்கு தட்டுப்பாடு நிலவுகிறது.
எனினும் மந்திகை எரிபொருள் நிரப்பு நிலையத்தில் பெட்ரோல் மட்டும் விநியோகிக்கப்படுகிறது.
இதேவேளை டீசல் இன்மையால் தனியார் சிற்றூர்தி சேவைப் போக்குவரத்தும் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், வீதியோரங்களில் சிற்றூர்திகள் நிறுத்தப்பட்டுள்ளதை அவதானிக்க முடிகிறது.
அதேவேளை கனரக வாகனங்கள் மற்றும் பார ஊர்திகளும் டீசல் இன்மை காரணமாக பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் பலர் தமது பெட்ரோல் வாகனங்களுக்குச் சேமித்து வைத்தல் நோக்கத்திற்காக
அதிகளவான பெட்ரோல் நிரப்பிச் செல்வதையும் அவதானிக்க முடிகிறது.








கரூரில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு ரூ.10 லட்சம் இழப்பீடு - முதல்வர் மு.க. ஸ்டாலின் அறிவிப்பு News Lankasri
