நாளை முதல் இலங்கையில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்
நாளைய தினம் முதல் நாட்டில் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படக் கூடிய அபாயம் உள்ளதாக எரிபொருள் விநியோகஸ்தர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி காரணமாக இந்த நிலைமை ஏற்படக்கூடிய ஆபத்து உள்ளது என்று அந்த சங்கத்தின் பொதுச் செயலாளர் கபில நாவுதுன்ன(Kapila Navuthunna) தெரிவித்துள்ளார்.
இதன்படி, எரிபொருள் நிரப்பு நிலையங்களின் வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டார்.
நாளை முதல் செலுத்த வேண்டிய வற் வரி
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
எரிபொருள் நிலையங்கள் கடும் நெருக்கடி நிலைக்குள்ளாகியுள்ளது. எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு விதிக்கப்பட்டுள்ள வற் வரி என்பது உரிமையாளருக்கு கிடைக்க கூடிய சிறிய தொகையில் செலுத்த வேண்டிய வற் வரியாகும். அதற்குரிய வற் தவணைகள் நாளை முதல் செலுத்தப்பட வேண்டும்.
அவ்வாறு செலுத்தப்படாது விட்டால் எரிபொருள் நிலையங்களின் அடுத்தக்கப்பட்ட பயணங்கள் மேற்கொள்ள முடியாத நிலைமை ஏற்படும்.
கடந்த 3 மாதங்களாக இந்த பிரச்சினையை தீர்க்க கோரிக்கை விடுத்தோம். எனினும் கலந்துரையாடல் மேற்கொள்வதற்கேனும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. 20ஆம் திகதிக்கு பின்னர் எரிபொருள் நிலையங்களில் கடும் நெருக்கடியை சந்திக்கும்.
இந்த VAT வரியால் சிறிய நிரப்பு நிலையங்கள் கூட 10 லட்சத்திற்கும் அதிக VAT வரி செலுத்த நேரிடும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
