மத்திய கிழக்கில் பதற்றம்: எரிபொருள் பற்றாக்குறையா..! இலங்கை மக்களுக்கு கடுமையான அவசர அறிவுறுத்தல்

Fuel Price In Sri Lanka Sri Lanka Fuel Crisis Fuel Price In World
By Mayuri Mar 01, 2026 07:03 AM GMT
Report

மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை இந்நாட்டின் எரிபொருள் விநியோகத்திற்குத் தடையாக அமையாது என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார். 

அத்துடன் யாராவது கலன்களில் எரிபொருளைப் பெற்றுச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய முயற்சித்தால், அவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என இலங்கை மக்களுக்கு கடுமையான அறிவுறுத்தலையும் வழங்கியுள்ளார். 

இன்று (01.03.2026) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.

ஈரானில் அதிரடி நடவடிக்கை! கூடப்போகும் வல்லுநர்கள் - புதிய உச்ச தலைவர் குறித்து வெளியான தகவல்

ஈரானில் அதிரடி நடவடிக்கை! கூடப்போகும் வல்லுநர்கள் - புதிய உச்ச தலைவர் குறித்து வெளியான தகவல்

எரிபொருள் தட்டுப்பாடு இல்லை

மேலும் தெரிவிக்கையில், ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் கையிருப்புகள் கிடைப்பதில் எவ்வித தாமதமும் ஏற்படாது. குறித்த எரிபொருட்கள் இந்தியா மற்றும் சிங்கப்பூரிலிருந்து கிடைக்கவுள்ளன.

இதன் காரணமாக மத்திய கிழக்கில் ஏற்பட்டுள்ள மோதல் நிலைமை இந்நாட்டின் எரிபொருள் விநியோகத்திற்குத் தடையாக அமையாது. நாங்கள் இதனைப் பொறுப்புடன் கூறுகிறோம். எனவே, எரிபொருள் வரிசைகளில் காத்திருப்பதில் எந்தப் பயனும் இல்லை.


மத்திய கிழக்கில் பதற்றம்: எரிபொருள் பற்றாக்குறையா..! இலங்கை மக்களுக்கு கடுமையான அவசர அறிவுறுத்தல் | Fuel Shortage In Sri Lanka

இன்று (01) நாங்கள் எரிபொருள் விநியோகம் செய்யத் திட்டமிட்டிருக்கவில்லை. எனினும், பொதுமக்கள் அதிகளவில் எரிபொருளைக் கொள்வனவு செய்வதால், விநியோகப் பணிகளில் ஈடுபடும் அனைத்து ஊழியர்களையும் நாம் பணிக்கு அழைத்துள்ளோம்.

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் - அங்கிருக்கும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

மத்திய கிழக்கில் அதிகரிக்கும் பதற்றம் - அங்கிருக்கும் இலங்கையர்களுக்கு அவசர அறிவிப்பு

கலன்களில் எரிபொருள் கிடைக்காது

தற்போது எரிபொருள் விநியோகம் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அதேபோன்று நாளை (02) பௌர்ணமி தினமாக இருந்தாலும், எரிபொருள் விநியோகம் தொடர்ந்து நடைபெறும். அனைத்து எரிபொருள் நிலையங்களுக்கும் கலன்களுக்கு எரிபொருள் வழங்க வேண்டாம் என்று அறிவுறுத்தியுள்ளோம்.

யாராவது கலன்களில் எரிபொருளைப் பெற்றுச் சென்று அதிக விலைக்கு விற்பனை செய்ய முயற்சித்தால், அவர்களுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக நடைமுறைப்படுத்தப்படும் என குறிப்பிட்டுள்ளார். 

ஈரானின் பலம் வாய்ந்த தலைவர் படுகொலை: ஈரானின் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கை

ஈரானின் பலம் வாய்ந்த தலைவர் படுகொலை: ஈரானின் அடுத்தகட்ட அதிரடி நடவடிக்கை

12ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, ஆனைப்பந்தி

06 Sep, 2014
5ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி
15ம் ஆண்டு நினைவஞ்சலி

கரம்பொன் மேற்கு, Montreal, Canada

23 Aug, 2011
மரண அறிவித்தல்

மட்டக்களப்பு, சிலாபம், Oslo, Norway

02 Sep, 2026
மரண அறிவித்தல்

அனலைதீவு 4ம் வட்டாரம், Woodbridge, Canada

03 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ் கோண்டாவில் வடக்கு, Jaffna, மெல்போன், Australia

05 Sep, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Toronto, Canada

18 Aug, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், சென்னை, India, Toronto, Canada

09 Sep, 2023
7ம் ஆண்டு நினைவஞ்சலி

உரும்பிராய், Duisburg, Germany

04 Sep, 2019
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

வசாவிளான் தெற்க்கு, கோண்டாவில் கிழக்கு, கொட்டாஞ்சேனை

06 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, கொழும்பு

02 Sep, 2026
9ம் ஆண்டு நினைவஞ்சலி

கல்வியங்காடு, Toronto, Canada

05 Sep, 2017
மரண அறிவித்தல்

அல்லிப்பளை, Spreitenbach, Switzerland

01 Sep, 2026
3ம் ஆண்டு நினைவஞ்சலி

கொக்குவில் மேற்கு, கொக்குவில், Toronto, Canada

05 Sep, 2023
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, London, United Kingdom

28 Aug, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி
24ம் ஆண்டு நினைவஞ்சலி

அச்சுவேலி பத்தமேனி

03 Sep, 2002
4ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

சுன்னாகம் தெற்கு

02 Sep, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, முள்ளியவளை, Croydon, United Kingdom

03 Sep, 2016
3ம் ஆண்டு நினைவஞ்சலி

காரைநகர், யாழ். கரவெட்டி, நெல்லியடி, உடையார்கட்டு, Toronto, Canada

03 Sep, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, காங்கேசன்துறை, Oshawa, Canada

31 Aug, 2026
மரண அறிவித்தல்

பளை, துன்னாலை, London, United Kingdom

28 Aug, 2026
மரண அறிவித்தல்

நெடுந்தீவு மேற்கு, வட்டக்கச்சி, Frutigen, Switzerland

26 Aug, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Harrow, United Kingdom

21 Aug, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US