எரிபொருள் தட்டுப்பாடு:கொழும்பு நகரில் குப்பை சேகரிப்பு நிறுத்தம்
எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு நகரில் சில இடங்களில் குப்பைகள் சேகரிக்கப்படுவது நிறுத்தப்பட்டுள்ளது.
கங்காராம, நாராஹென்பிட்டி, பொரள்ளை, தெமட்டகொடை ஆகிய பிரதேசங்களில் குப்பைகளை சேரிக்கும் வாகனங்களில் எரிபொருள் தீர்ந்து போயுள்ளதால், அந்த பிரதேசங்களில் உள்ள குப்பைகளை அப்புறப்படும் நடவடிக்கை தடைப்பட்டுள்ளது என கொழும்பு மாநகர சபையின் கன கழிவு பொருட்கள் தொடர்பான நிலையியல் குழுவின் உறுப்பினர் மகேந்திர டி சில்வா தெரிவித்துள்ளார்.
ஏனைய இடங்களில் கன கழிவுப் பொருட்களை அப்புறப்படுத்தும் ஒப்பந்தம் தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது. எனினும் மேற்கூறிய பிரதேசங்களில் உள்ள கன கழிவு பொருட்களை கொழும்பு மாநகர சபையே சேகரித்து வருகிறது.
தனியார் ஒப்பந்த நிறுவனம் தமது வாகனங்களுக்கு தேவையான எரிபொருள் தொகையை பெற்றுக்கொண்டுள்ளன. எரிபொருள் தட்டுப்பாடு காரணமாக கொழும்பு நகரில் குப்பைகள் சேகரிப்பதில் தடையேற்பட்டுள்ளது.
இரண்டாவது முறையாக இந்த நிலைமை ஏற்பட்டுள்ளதுடன் மார்ச் மாத ஆரம்பத்திலும் இப்படியான நிலைமை ஏற்பட்டது எனவும் அவர் கூறியுள்ளார்.
ஆரம்பமாகிய சூர்ய பெயர்ச்சி... பிறந்தது மார்கழி மாதம்! அதிர்ஷ்டத்தை தட்டித்தூக்கும் 6 ராசிகள் Manithan
கொத்தாக 15 பேர்களைப் பலி வாங்கிய தந்தையும் மகனும்: கடுமையான முடிவெடுக்கும் அவுஸ்திரேலியா News Lankasri