எரிபொருள் கோட்டா தொடர்பில் வெளிவந்துள்ள தகவல்
இலங்கையில் தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் கோட்டா தொடர்பில் தகவலொன்று வெளியாகியுள்ளது.
அதன்படி தற்போது நடைமுறையில் உள்ள எரிபொருள் கோட்டாவில் எவ்வித மாற்றமும் செய்யப்பட மாட்டாது என மின்சக்தி மற்றும் எரிசக்தி அமைச்சு தெரிவித்துள்ளது.
வாராந்தம் விநியோகிக்கப்படும் எரிபொருளின் அளவை மாற்றமின்றி பேணவுள்ளதாக எரிசக்தி அமைச்சின் உயரதிகாரி ஒருவரை மேற்கோள்காட்டி செய்தி வெளியாகியுள்ளது.
எரிபொருள் கோட்டா முறை
அவர் மேலும் தகவல் வெளியிடுகையில், கையிருப்பில் உள்ள எரிபொருள் மற்றும் கொள்வனவிற்கான இயலுமை உள்ளிட்ட விடயங்களை கருத்தில் கொண்டு எரிபொருள் கோட்டா முறையில் மாற்றத்தை ஏற்படுத்தாதிருக்க திட்டமிடப்பட்டுள்ளது.
நாட்டின் எரிபொருள் சந்தையில் ஏனைய சர்வதேச நிறுவனங்களின் முதலீடுகள் ஆரம்பிக்கப்பட்டதன் பின், தற்போது நடைமுறையில் எரிபொருள் கோட்டா முறையில் மாற்றங்கள் ஏற்படுத்தப்படக்கூடுமென சுட்டிக்காட்டியுள்ளதாகவும் தெரியவருகிறது.
எனினும் இந்த விடயம் தொடர்பில் எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகரவிடமிருந்து எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புகளும் வரவில்லை என்பதும் குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

Super Singer: Duet Round சுற்றில் நடுவர்களை வியக்க வைத்த போட்டியாளர்கள்- இறுதி நடந்த குழப்பம் Manithan

ரஜினி, கமல் உள்ளிட்ட பல நட்சத்திரங்கள் கலந்துகொண்ட ஐசரி கே கணேஷ் மகள் திருமணம்.. புகைப்படங்கள் இதோ Cineulagam
