எரிபொருள் கொள்வனவு இந்திய நிறுவனத்திற்கு : 500 மில்லியன் டொலர்களை வழங்கும் இந்தியா
நாட்டில் ஏற்பட்டுள்ள டொலர் தட்டுப்பாட்டை போக்குவதற்காக 500 மில்லியன் அமெரிக்க டொலர்களை பெற்றுக்கொள்வது தொடர்பாக இந்திய அரசுடன் நடத்திய பேச்சுவார்த்தை வெற்றியளித்துள்ளதாக தெரியவருகிறது.
இதனடிப்படையில் இலங்கை அரசாங்கத்தின் பிரதிநிதி ஒருவர் அடுத்த வாரம் இந்தியாவுக்கு சென்று இது தொடர்பான மேலதிக நடவடிக்கைகளை மேற்கொள்ள உள்ளதாக கூறப்படுகிறது.
இதனிடையே பெட்ரோல், டீசல் உட்பட எரிபொருளை வெளிநாடுகளில் இருந்து கொள்வனவு செய்வதில், இந்திய எண்ணெய் (IOC) நிறுவனத்தின் பங்களிப்பை அதிகரிப்பது குறித்து அரச தரப்பில் கவனம் செலுத்தப்பட்டுள்ளதாக பேசப்படுகிறது.
தற்போது நடத்தப்படும் பேச்சுவார்த்தைகள் மற்றும் இணக்கப்பாடுகளுக்கு அமைய இலங்கைக்கு தேவையான எரிபொருள் உட்பட அத்தியவசிய பொருட்களை இறக்குமதி செய்வதில் ஏற்பட்டுள்ள பிரச்சினைக்கு தீர்வு கிடைக்கும் என தெரிவிக்கப்படுகிறது.



