எரிபொருள் விலை அதிகரிப்பு தொடர்பில் அமைச்சர் வெளியிட்ட அறிவிப்பு
எரிபொருள் விலையில் மாற்றம் கொண்டு வருவது தொடர்பில் விசேட அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளது.
எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர இது குறித்து தெளிவுப்படுத்தியுள்ளார்.
இதன்படி, நவம்பர் மாதத்தில் எரிபொருள் விலை மீண்டும் திருத்தப்பட மாட்டாது என அமைச்சர் கஞ்சன தெரிவித்துள்ளார்.
விலை திருத்தப்படாது
தனது டுவிட்டர் தளத்தில் இது தொடர்பில் பதிவிட்டுள்ளார்.
எரிபொருளின் விலை அண்மையில் திருத்தப்பட்டமையால் எதிர்வரும் 15ஆம் திகதி மீண்டும் விலையில் மாற்றம் செய்யப்படாது.
மேலும், வழங்குனர்களுடன் புதிய முறைமைக்கு உடன்பட்டதன் பின்னர், ESPO கச்சா எண்ணெய் இறக்கும் பணி நேற்று (12) இரவு ஆரம்பிக்கப்பட்டதாகவும் அமைச்சர் கூறினார்.
1. ESPO Crude Oil cargo commenced unloading last night after a new modality was agreed with Supplier.
— Kanchana Wijesekera (@kanchana_wij) November 13, 2022
2. 1st Petrol 95 Cargo imported by CPC since April, commenced unloading yesterday.
3. No further Price revision on November 15th, as the prices were revised earlier this week.