எரிபொருள் விலை மாற்றம் தொடர்பில் சற்றுமுன் வெளியான அறிவிப்பு (Video)
இந்த வாரம் எரிபொருள் விலையில் மாற்றம் இருக்காது என எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பில் சற்றுமுன் அமைச்சர் டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
ஏற்கனவே தெரிவிக்கப்பட்டிருந்த விடயம்
ஒவ்வொரு மாதமும் இரண்டு தடவைகள் எரிபொருள் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக எரிசக்தி அமைச்சர் கஞ்சன விஜேசேகர ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
அதன்படி ஒவ்வொரு மாதமும் 1ஆம் மற்றும் 15ஆம் திகதிகளில் எரிபொருட்களின் விலையில் மாற்றங்களை அறிவிப்பதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்திருந்தார்.
அத்துடன் எரிபொருள் விலை சூத்திரத்தின் பிரகாரம் இந்த தீர்மானம் எடுக்கப்பட்டதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.
இந்த நிலையிலேயே எரிபொருள் விலையில் மாற்றம் ஏற்படும் என எதிர்பார்க்கப்பட்டதுடன், தற்போது எரிபொருள் விலையில் மாற்றம் இல்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
Non placement of orders by Dealers anticipating a price reduction has led to FuelStations drying up. There will be No Price revision this week. CPC & LIOC both has ample stocks to fulfill requirements guaranteed by NFP. I request the Dealers to place orders for their requirements
— Kanchana Wijesekera (@kanchana_wij) November 3, 2022

Viral Video: கழுகுடன் வானில் பறந்து செல்லும் மீனின் தத்ரூப காட்சி! திரும்ப திரும்ப பார்க்க வைக்கும் காட்சி Manithan
