ஐஎம்எப் இன் புதிய நிபந்தனை! விரைவில் எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம்..

Fuel Price In Sri Lanka Sri Lanka Economic Crisis IMF Sri Lanka Economy of Sri Lanka Dollars
By Aanadhi May 24, 2026 07:03 AM GMT
Report

சர்வதேச நாணய நிதியத்தின் நிபந்தனைகளைப் பூர்த்திசெய்யும் வகையில் விரைவில் எரிபொருட்களின் விலைகள் அதிகரிக்கப்படலாம் என்று தெரிய வந்துள்ளது.

விஸ்தரிக்கப்பட்ட நிதி வசதியின் கீழ் இலங்கையின் ஒருங்கிணைந்த ஐந்தாவது மற்றும் ஆறாவது மீளாய்வுகளை நிறைவு செய்வது, சர்வதேச நாணய நிதியத்தின் செயற்குழுவின் ஒப்புதலுக்கு உட்பட்டது என்று சர்வதேச நாணய நிதியம் அறிவித்துள்ளது.

செய்தியாளர் சந்திப்பொன்றில் கருத்துவெளியிட்ட சர்வதேச நாணய நிதியத்தின் தகவல் தொடர்புத் துறையின் இயக்குனர் ஜூலி கொசெக், கடந்த ஏப்ரல் 9ம் திகதி சர்வதேச நாணய நிதியத்தின் பிரதிநிதிகளுக்கும் இலங்கை அரசின் முக்கியஸ்தர்களுக்கும் இடையே ஒரு அதிகாரிகள் மட்டத்திலான இணக்கப்பாடு எட்டப்பட்டதாகக் குறிப்பிட்டுள்ளார்.

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பணம் மற்றும் தங்க நகைகள் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

இலங்கை மக்களுக்கு அவசர எச்சரிக்கை! பணம் மற்றும் தங்க நகைகள் வைத்திருப்போருக்கு முக்கிய அறிவுறுத்தல்

இலங்கைக்கு கிடைக்கும் நிதி 

செயற்குழுவின் ஒப்புதலுக்காக இந்தத் திட்டத்தைச் சமர்ப்பிப்பதற்கு முன்பு, இலங்கை பல பூர்வாங்க நடவடிக்கைகளை முடிக்க வேண்டும் என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

ஐஎம்எப் இன் புதிய நிபந்தனை! விரைவில் எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம்.. | Fuel Price Increase Sri Lanka

மின்சாரம் மற்றும் எரிபொருளுக்கான செலவை உள்ளடக்கும் வகையில் விலை நிர்ணய சூத்திரங்களைச் செயல்படுத்துதல், நலிவடைந்த மற்றும் பாதிக்கப்படக்கூடிய சமூகங்களைப் பாதுகாப்பதற்கான நிவாரண வழிமுறைகளைச் செயல்படுத்துதல் மற்றும் நிதி உத்தரவாதங்களை நிறைவு செய்தல் ஆகியவை இதில் அடங்கும்.

செயற்குழுவின் ஒப்புதலைத் தொடர்ந்தே, இலங்கைக்கு சுமார் 700 மில்லியன் அமெரிக்க டொலர் நிதி கிடைக்கும் என்று ஜுலி கொசெக் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

செலவின மீட்பு விலை சீர்திருத்தங்கள் மற்றும் நலிவடைந்த சமூகங்களைப் பாதுகாப்பதற்கான வழிமுறைகள் ஆகிய இரண்டையும் வழங்குவதையே இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது என்று அவர் மீண்டும் வலியுறுத்தினார்.

நாட்டின் பொருளாதாரம் 

மேலும், இலங்கை சமீபத்தில் சந்தித்த புயலும், மத்திய கிழக்கில் நிலவும் மோதல்களின் வெளிப்புறத் தாக்கமும் நாட்டின் பொருளாதாரம் மற்றும் மக்கள் மீது கடுமையான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஐஎம்எப் இன் புதிய நிபந்தனை! விரைவில் எரிபொருள் விலை அதிகரிக்கும் சாத்தியம்.. | Fuel Price Increase Sri Lanka

அரசாங்கத்தால் செயல்படுத்தப்பட்ட எரிபொருள் மானியத் திட்டம், குறிப்பாக ஒரு லீட்டர் டீசலுக்கு 100 ரூபாய் மானியம் வழங்குவது, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) விலை நிர்ணயக் கட்டமைப்புடன் முரண்படுவதாக இதன்போது செய்தியாளர்கள் சுட்டிக்காட்டியபோதும் அதற்கான நேரடிப் பதில் வழங்குவதில் இருந்து ஜுலி கொசெக் பிடிகொடுக்காமல் நழுவியுள்ளார்.

எனினும் சர்வதேச நாணய நிதியத்துடனான உடன்பாடுகளை நிறைவேற்றுவது இலங்கை அரசாங்கத்தின் கடமைப்பாடுகளில் ஒன்றாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டிள்ளார்.

அதன் பிரகாரம் எரிபொருட்களுக்கான விலை மீண்டும் குறிப்பிடத்தக்க அளவில் அதிகரிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

கூடுதலாக ஒரு நாள் கூட சிறையில் இருக்க விரும்பாத கபில! சொந்த விருப்பில் எடுத்த முக்கிய முடிவு..

கூடுதலாக ஒரு நாள் கூட சிறையில் இருக்க விரும்பாத கபில! சொந்த விருப்பில் எடுத்த முக்கிய முடிவு..

பசிலை இலங்கைக்கு அழைத்து வருவதில் நாமலுக்கு காத்திருக்கும் சவால்! நாட்டுக்கு திரும்பியவுடன் கைது..

பசிலை இலங்கைக்கு அழைத்து வருவதில் நாமலுக்கு காத்திருக்கும் சவால்! நாட்டுக்கு திரும்பியவுடன் கைது..

மரண அறிவித்தல்

உசன், கரவெட்டி, Markham, Canada

13 Oct, 2026
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்

இமையானன் கிழக்கு உடுப்பிட்டி, சுவிஸ், Switzerland, London East Ham, United Kingdom

14 Oct, 2026
மரண அறிவித்தல்

மானிப்பாய், Waterloo, Canada

04 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
5ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், London, United Kingdom

24 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US