எரிபொருள் விலையில் சடுதியான அதிகரிப்பு! காரணத்தை வெளியிட்ட ஆளும் தரப்பு

Fuel Price In Sri Lanka Sri Lanka Economic Crisis Sri Lanka Fuel Crisis Petrol diesel price Middle East
By Rakesh Jun 01, 2026 06:01 AM GMT
Report

உலக சந்தையில் ஏற்பட்டுள்ள விலை அதிகரிப்பு மற்றும் சர்வதேச ரீதியிலான சவால்களின் காரணமாகவே, உள்நாட்டில் தற்காலிகமாக எரிபொருள் விலைகளில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று ஆளுங்கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அசித நிரோஷன தெரிவித்தார்.

ஊடகவியலாளர்களின் கேள்விகளுக்குப் பதிலளித்த அவர்,

ஒரு நாட்டை ஆட்சி செய்யும்போது இயற்கை பேரிடர்கள், பொருளாதார வீழ்ச்சிகள் மற்றும் கடந்த கால ஆட்சியாளர்களின் தவறான முடிவுகள் போன்ற உள்நாட்டுப் பிரச்சினைகளுக்கு முகங்கொடுக்க வேண்டியுள்ளது என்று சுட்டிக்காட்டினார்.

இலங்கையில் மஞ்சள் காவிகளின் கொடூர செயல் - மற்றுமொரு சிறுமிக்கு நடந்த கொடுமை

இலங்கையில் மஞ்சள் காவிகளின் கொடூர செயல் - மற்றுமொரு சிறுமிக்கு நடந்த கொடுமை

சர்வதேச யுத்தச் சூழல்   

குறிப்பாக, 2022ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட கடுமையான பொருளாதார நெருக்கடியின்போது, ஆட்சியாளர்களின் முறையற்ற நிர்வாகத்தால் பொதுமக்கள் பெரும் இன்னல்களுக்கு ஆளானதை நினைவுகூர்ந்த அவர், தற்போதைய அரசு இயற்கை பேரிடர்களால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பில்லியன் கணக்கில் இழப்பீடுகளை வழங்கி, அவர்களின் வாழ்வாதாரத்தை மீளக் கட்டியெழுப்பியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.

தற்போது உள்நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் விலை மாற்றமானது உள்நாட்டு நிர்வாகத் தவறு அல்ல. மாறாக, அது முற்றிலும் சர்வதேச காரணிகளால் உருவானது என்றும் அவர் வலியுறுத்தினார்.

எரிபொருள் விலையில் சடுதியான அதிகரிப்பு! காரணத்தை வெளியிட்ட ஆளும் தரப்பு | Fuel Price In Sri Lanka

"மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ப் பதற்றம் மற்றும் உலகளாவிய எண்ணெய் வர்த்தகத்தில் 20 சதவீதத்துக்கும் அதிகமான பங்கைக் கொண்ட ஹோர்முஸ் நீரிணையில் ஏற்பட்டுள்ள நெருக்கடிகள், உலக அளவில் எண்ணெய் விலையுயர்வுக்கு வழிவகுத்துள்ளன.

இந்தச் சர்வதேச யுத்த சூழலானது இலங்கை போன்ற நாடுகளை மட்டுமன்றி இந்தியா, வியட்நாம் மற்றும் சிங்கப்பூர் போன்ற வலுவான பொருளாதாரத்தைக் கொண்ட நாடுகளையும் கூட பாதித்துள்ளது.

உலகப் பொருளாதாரத்தில் பெரும் பங்கைக் கொண்ட இந்தியாவே கடந்த சில வாரங்களில் நான்கு முறை எரிபொருள் விலையை உயர்த்த வேண்டிய கட்டாயத்துக்கு ஆளானதுடன், இந்திய ரூபாவின் மதிப்பிலும் ஏற்ற இறக்கங்கள் ஏற்பட்டுள்ளது" என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

காப்புறுதிக் கட்டணங்களின் உயர்வு மற்றும் கப்பல் போக்குவரத்துச் செலவுகள் அதிகரிப்பு போன்ற காரணிகளால், அரசுக்குக் கட்டுப்படுத்த முடியாத எல்லைக்கு அப்பால் இந்த விலை அதிகரிப்பு சென்றுள்ளது என்றும், இதனாலேயே எரிபொருள் விலையில் திருத்தம் செய்ய நேரிட்டது என்றும் அவர் விளக்கமளித்தார்.

எரிபொருள்  விலை 

விலை அதிகரிப்பு ஏற்பட்ட போதிலும், அரசு இன்னும் மக்களுக்குப் பெருமளவு மானியங்களை வழங்கி வருகின்றது என்றும் அசித நிரோஷன தெரிவித்தார்.

அதன்படி, டீசல் லீட்டர் ஒன்றுக்கு 100 ரூபாவும், பெற்றோல் லீட்டர் ஒன்றுக்கு 10 ரூபாவும் அரசு நட்டத்தைத் தாங்கி மானியமாக வழங்கி வருகின்றது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

எரிபொருள் விலையில் சடுதியான அதிகரிப்பு! காரணத்தை வெளியிட்ட ஆளும் தரப்பு | Fuel Price In Sri Lanka

சர்வதேச நாணய நிதியத்துடனான வேலைத்திட்டம் வெற்றிகரமாக முன்னெடுக்கப்பட்டு வருகின்றது என்றும், அதன் 5ஆம் கட்டத் தவணையாக 695 மில்லியன் டொலர்களைப் பெற்றுக்கொள்ள முடிந்துள்ளது என்றும் அவர் கூறினார்.

"ஏற்றுமதி வருவாயை அதிகரித்தல், அரச வருமானத்தை உயர்த்துதல் மற்றும் தேவையற்ற செலவுகளைக் கட்டுப்படுத்துவதன் மூலம் நாட்டின் பொருளாதாரத்தை நீண்டகால அடிப்படையில் ஸ்திரப்படுத்த அரசு நடவடிக்கை எடுத்து வருகின்றது.

எனவே, பொதுமக்கள் இந்தத் தற்காலிக விலை மாற்றங்கள் குறித்து அச்சமடையத் தேவையில்லை" என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.

சர்வதேசச் சூழல் வழமைக்குத் திரும்பியவுடன் மக்களுக்குச் சாதகமான விலையில் எரிபொருளை வழங்க அரசு நிச்சயம் நடவடிக்கை எடுக்கும் என்றும் அவர் உறுதியளித்தார்.

பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள துயர நிலை! ஆட்சியாளர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் - வெளியான எச்சரிக்கை

பொதுமக்களுக்கு ஏற்பட்டுள்ள துயர நிலை! ஆட்சியாளர்களுக்கு ஆபத்து ஏற்படலாம் - வெளியான எச்சரிக்கை

மீண்டுமொரு பொருளாதார ஆபத்து.. ரணிலின் அபாய எச்சரிக்கை!

மீண்டுமொரு பொருளாதார ஆபத்து.. ரணிலின் அபாய எச்சரிக்கை!

2ம் ஆண்டு நினைவஞ்சலி

நல்லூர், Kirchheim Unter Teck, Germany

10 Nov, 2024
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

அனலைதீவு, Mississauga, Canada, Brampton, Canada

18 Oct, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 6ம் வட்டாரம், Le Blanc-Mesnil, France

18 Oct, 2025
மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, Wembley, United Kingdom

09 Oct, 2026
மரண அறிவித்தல்

நாயன்மார்கட்டு, Toronto, Canada

15 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, Chennai, India, London, United Kingdom

20 Oct, 2016
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அராலி மேற்கு வட்டுகோட்டை, வேலணை 5ம் வட்டாரம், புத்தளம், Bergisch Gladbach, Germany

21 Oct, 2025
5ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊர்காவற்துறை மேற்கு, ஊர்காவற்துறை

18 Oct, 2021
2ம் ஆண்டு நினைவஞ்சலி

அலுத்மாவத்தை, நியூ யோர்க், United States

19 Oct, 2024
மரண அறிவித்தல்

அரியாலை, யாழ்ப்பாணம்

17 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், கனடா, Canada

15 Oct, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

சரசாலை வடக்கு, Leiden, Netherlands, சுன்னாகம் தெற்கு

29 Oct, 2025
நன்றி நவிலல்

சுழிபுரம் கிழக்கு, சுழிபுரம்

18 Sep, 2026
நன்றி நவிலல்

புளியங்குளம், Middelfart, Denmark

19 Sep, 2026
11ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி, சுவீடன், Sweden

18 Oct, 2015
மரண அறிவித்தல்
39ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், இரத்தினபுரி, கொழும்பு

18 Oct, 1987
6ம் ஆண்டு நினைவஞ்சலி

யாழ்ப்பாணம், உருத்திரபுரம்

17 Oct, 2020
1ம் ஆண்டு நினைவஞ்சலி

மூளாய், London, United Kingdom

17 Oct, 2025
3ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், Scarborough, Canada

17 Oct, 2023
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

சாவகச்சேரி, Scarborough, Canada

17 Sep, 2026
மரண அறிவித்தல்

வேலணை மேற்கு 8ம் வட்டாரம், கோண்டாவில் கிழக்கு, Ajax, Canada

13 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

மட்டுவில் வடக்கு, Harrow, United Kingdom

10 Oct, 2024
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 2ம் வட்டாரம், புங்குடுதீவு 12ம் வட்டாரம், Markham, Canada

17 Oct, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Nashville, United States, Bethlehem, United States

10 Oct, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், London, United Kingdom

13 Oct, 2024
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஏழாலை, யாழ்ப்பாணம், திருநெல்வேலி, யாழ்ப்பாணம்

18 Oct, 2016
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US