இலங்கையில் சடுதியாக குறைக்கப்பட்ட எரிபொருளின் விலை! காரணத்தை வெளியிட்ட அமைச்சர்
முன்பு 400 ரூபாயாக இருந்த நாணய மாற்று விகிதம் தற்போது 300 ரூபாயாகக் குறைந்துள்ளது, இதனால் எரிபொருள், எரிவாயு, மருந்து ஆகியவற்றின் விலைகள் குறைகின்றன என போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர் கலாநிதி பந்துல குணவர்தன(Bandula Gunawardena) தெரிவித்துள்ளார்.
அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் இன்றைய ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
நாணய மாற்று வீதம்
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
கடந்த காலங்களில் விலைச்சூத்திரம் இன்றி மேற்கொள்ளப்பட்டது போன்று உலக சந்தையில் எரிபொருள் விலை உயர்வடைந்த போதிலும் நாட்டு மக்களுக்கு குறைந்த விலையில் எரிபொருள்; வழங்கப்பட்டமையால் பெட்ரோலிய கூட்டுத்தாபனத்திற்கு பெரும் நட்டம் ஏற்பட்டது.

ஆனால் தற்போது அவ்வாறு செய்யப்படவில்லை, உலக சந்தையில் உள்ள எரிபொருள் விலைக்கு ஏற்ப நாட்டில் எரிபொருள் விலை தீர்மானிக்கப்படுகின்றது.
முன்பு 400 ரூபாயாக இருந்த நாணய மாற்று விகிதம் தற்போது 300 ரூபாயாகக் குறைந்துள்ளது, இதனால் எரிபொருள், எரிவாயு, மருந்து ஆகியவற்றின் விலைகள் குறைகின்றன.
மேலும் உலக சந்தையில் எரிபொருள் விலை அதிகரிப்பு அல்லது குறைவினால் இந்நாட்டின் எரிபொருள் விலையில் ஏற்ற இறக்கம் காணப்படுவதாகவும், அதனை அரசியல்வாதிகளாலோ அல்லது அரசாங்கத்தினாலோ மாற்ற முடியாது என குறிப்பிட்டுள்ளார்.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |
Bigg Boss: இருக்கையை தூக்கிய வீசி அரங்கத்தை விட்டு வெளியேறிய விஜய் சேதுபதி! பரபரப்பான சம்பவம் Manithan
சக்தியை கண்டுபிடிக்க போராடும் ஜனனி.. பார்கவியை வீட்டை விட்டு துரத்தும் ஆதி குணசேகரன்.. எதிர்நீச்சல் புரோமோ வீடியோ Cineulagam