ஜூலை மாதத்துக்குள் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் 198 மில்லியன் டொலராகக் குறையும்..!

Sri Lanka Fuel Crisis Petrol diesel price Dollars
By Rakesh Jun 04, 2026 02:31 AM GMT
Report

உலகச் சந்தையில் கச்சா எண்ணெய் விலைகள் ஸ்திரமாக இருக்கும் பட்சத்தில் அல்லது தொடர்ந்தும் வீழ்ச்சியடையும் பட்சத்தில், இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் வரும் ஜூலை மாதத்துக்குள் கணிசமான அளவு குறையும் என இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா தெரிவித்துள்ளார்.

நாட்டின் எரிபொருள் இறக்குமதிச் செலவுகள் குறித்து ஊடகங்களுக்குக் கருத்துத் தெரிவிக்கும் போதே அவர் இதனைச் சுட்டிக்காட்டியுள்ளார்.

இலங்கை பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

இலங்கை பரீட்சை திணைக்களம் விடுத்துள்ள விசேட அறிவிப்பு

 11 எரிபொருள் கப்பல்கள் 

உலகச் சந்தையில் நிலவிய அதிக விலை மற்றும் மின் உற்பத்திக்காக மேலதிக எரிபொருளை இறக்குமதி செய்ய வேண்டியிருந்தமை காரணமாக, அண்மைக்காலமாக எரிபொருளுக்கான டொலர் வெளிப்பாய்ச்சல் நாட்டில் கடுமையாக அதிகரித்திருந்தது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இந்த விடயம் குறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், "வழமையாக இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனமானது எரிபொருள் இறக்குமதிக்காக மாதத்துக்குச் சராசரியாக 100 மில்லியன் அமெரிக்க டொலர்களையே செலவிட்டு வந்தது.

ஜூலை மாதத்துக்குள் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் 198 மில்லியன் டொலராகக் குறையும்..! | Fuel Import Costs Will Drop To 198 Million By July

எனினும், கடந்த ஏப்ரல் மாதத்தில் இந்தச் செலவினம் 522 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை அதிரடியாக உயர்ந்தது. இதற்கான கொடுப்பனவுகள் கடந்த மே மாதத்திலேயே செலுத்தப்பட்டன. உண்மையில், எரிபொருள் கொள்வனவுக்காக நாட்டிலிருந்து அதிகளவிலான டொலர்கள் வெளியேறிய மாதமாக கடந்த மாதம் பதிவாகியுள்ளது.

கடந்த ஏப்ரல் மாதத்தில் மட்டும் 11 எரிபொருள் கப்பல்கள் நாட்டுக்கு இறக்குமதி செய்யப்பட்டன.

அவை அனைத்துமே சர்வதேச சந்தையில் விலை அதிகமாகக் காணப்பட்ட காலகட்டத்திலேயே கொள்வனவு செய்யப்பட்டன. அத்துடன், மின் உற்பத்திக்காக மாத்திரம் பிரத்தியேகமாக ஒரு மேலதிக டீசல் கப்பலை நாம் இறக்குமதி செய்ய வேண்டியிருந்தது. அதுவும் அதிக விலைக்கே வாங்கப்பட்டது.

சுவிட்சர்லாந்தில் ஆபத்தான வாக்கெடுப்பு..! தமிழர்களுக்கு சாதகமா - பாதகமா..

சுவிட்சர்லாந்தில் ஆபத்தான வாக்கெடுப்பு..! தமிழர்களுக்கு சாதகமா - பாதகமா..

அமெரிக்க டொலர்கள்

டொலர் செலவினம் இந்தளவு அதிகரிக்க இதுவே பிரதான காரணமாக அமைந்தது. இருப்பினும், இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் தற்போது மாதாந்த எரிபொருள் இறக்குமதிச் செலவுகளைக் குறைப்பதற்கான நடவடிக்கைகளை எடுத்துள்ளது.

ஜூலை மாதத்துக்குள் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் 198 மில்லியன் டொலராகக் குறையும்..! | Fuel Import Costs Will Drop To 198 Million By July

அதற்கமைய, 522 மில்லியன் அமெரிக்க டொலர்களாக உயர்ந்திருந்த எரிபொருள் இறக்குமதிச் செலவினம், இந்த ஜூன் மாதத்தில் 318 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை குறைக்கப்பட்டுள்ளது. எமது தற்போதைய கணிப்புகளின்படி, வரும் ஜூலை மாதமாகும்போது இதனை மேலும் 198 மில்லியன் அமெரிக்க டொலர்கள் வரை குறைக்க முடியும் என எதிர்பார்க்கின்றோம்." - என்றார்.

சப்புகஸ்கந்த எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்துக்கான கச்சா எண்ணெய் விநியோகம் சீரமைக்கப்பட்டுள்ளமையே இந்தச் செலவுக் குறைப்புக்கு முக்கிய காரணம் என்று தெரிவித்த இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின் தலைவர் டி.ஜே. ராஜகருணா, சுத்திகரிப்பு நிலையத்தின் செயற்பாடுகளுக்குத் தேவையான அனைத்துக் கச்சா எண்ணெய்களும் தற்போது கிடைக்கப்பெற்றுள்ளன என்றும் உறுதிப்படுத்தினார்.

உயிரை மாய்த்துக் கொள்ளும் மனநிலையில் சுரேஷ் சலே..! நீதிமன்றில் அம்பலமான தகவல்கள்

உயிரை மாய்த்துக் கொள்ளும் மனநிலையில் சுரேஷ் சலே..! நீதிமன்றில் அம்பலமான தகவல்கள்

 அடுத்தகட்ட நடவடிக்கை

உலகச் சந்தை நிலவரங்கள் குறித்து அவர் மேலும் குறிப்பிடுகையில், "தற்போதைய சர்வதேச சந்தை நிலவரங்களின்படி, டீசல் விலையானது படிப்படியாகக் குறைந்து வருகின்றது.

உலகச் சந்தை விலை இதே மட்டத்தில் நீடித்தால் அல்லது மேலும் குறைந்தால், எவ்வித பெரிய சிக்கல்களுமின்றி இந்தச் செலவினங்களை எம்மால் மேலாண்மை செய்ய முடியும். இதுவே எமது திட்டமாகும்.

ஜூலை மாதத்துக்குள் எரிபொருள் இறக்குமதிச் செலவினம் 198 மில்லியன் டொலராகக் குறையும்..! | Fuel Import Costs Will Drop To 198 Million By July

இருந்தபோதிலும், ஜூலை மாதத்துக்குப் பின்னரான நிலைமையானது சர்வதேச சந்தையின் மாற்றங்கள் மற்றும் புவிசார் அரசியல் பதற்றங்கள் என்பவற்றிலேயே தங்கியுள்ளது. தற்போதைக்கு ஜூலை மாதம் வரையிலான தெளிவான திட்ட வரைவு எங்களிடம் உள்ளது.

அதற்குப் பிறகான சூழலை உலகச் சந்தை விலைகளைக் கொண்டே தீர்மானிக்க வேண்டும். சர்வதேச சந்தையில் மீண்டும் விலை அதிகரிப்பொன்று ஏற்பட்டாலோ அல்லது உலகளாவிய மோதல்கள் தீவிரமடைந்தாலோ, அது குறித்து சர்வதேச நாணய நிதியத்துடன் கலந்துரையாடி அடுத்தகட்ட நடவடிக்கை குறித்துத் தீர்மானிக்க நேரிடும் என குறிப்பிட்டுள்ளார்.

1ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரிக்காடு வல்வெட்டித்துறை, கிளிநொச்சி

24 May, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

Kopay South, கட்டைப்பிராய்

12 Jun, 2018
1ம் ஆண்டு நினைவஞ்சலி

திருகோணமலை, Liverpool, United Kingdom

11 Jun, 2025
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, வவுனியா

10 Jun, 2026
மரண அறிவித்தல்

Kuala Lumpur, Malaysia, சிட்னி, Australia

06 Jun, 2026
மரண அறிவித்தல்

புத்தூர், கந்தர்மடம், India, Brampton, Canada

06 Jun, 2026
மரண அறிவித்தல்

யாழ் மாதகல் வடக்கு, Jaffna, Viborg, Denmark

09 Jun, 2026
மரண அறிவித்தல்

மாவிட்டபுரம், மல்லாகம், Lewisham, United Kingdom, Harrow, United Kingdom

08 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை

23 May, 2025
மரண அறிவித்தல்

தம்பிலுவில், இணுவில் மேற்கு, Kenton, United Kingdom, இணுவில் கிழக்கு

06 Jun, 2026
2ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

அரியாலை, London, United Kingdom

03 Jun, 2026
மரண அறிவித்தல்

தேனி, India, சென்னை, India

10 Jun, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி

உடுப்பிட்டி, Markham, Canada

10 Jun, 2016
5ம் ஆண்டு நினைவஞ்சலி

இடைக்காடு, London, United Kingdom

06 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

Holland, Netherlands, Amsterdam, Netherlands

12 Jun, 2023
மரண அறிவித்தல்
3ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை மேற்கு, கொழும்பு

13 Jun, 2023
1ம் ஆண்டு நினைவஞ்சலி
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், பேர்ண், Switzerland, Toronto, Canada

10 Jun, 2021
மரண அறிவித்தல்
மரண அறிவித்தல்

வயாவிளான், அளவெட்டி

08 Jun, 2026
5ம் ஆண்டு நினைவஞ்சலி

மண்டைதீவு 1ம் வட்டாரம், கோண்டாவில் மேற்கு

04 Jun, 2021
3ம் ஆண்டு நினைவஞ்சலி

மயிலிட்டி, Yishun, Singapore, Stouffville, Canada

13 Jun, 2023
5ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 3ம் வட்டாரம், ஜெர்லாஃபிங்கன், Switzerland

05 Jun, 2021
மரண அறிவித்தல்

புங்குடுதீவு, Frankfurt, Germany

06 Jun, 2026
மரண அறிவித்தல்

ஆவரங்கால், India, ஈரான், Iran, பிரான்ஸ், France, Herborn, Germany

30 May, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Croydon, United Kingdom

08 Jun, 2026
16ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், Thun, Switzerland

08 Jun, 2010
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 4ம் வட்டாரம், புங்குடுதீவு 5ம் வட்டாரம், செட்டிக்குளம், பேர்லின், Germany

04 Jun, 2026
1ம் ஆண்டு நினைவஞ்சலி
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வவுனியா, Bristol, United Kingdom

08 Jun, 2024
மரண அறிவித்தல்

மீசாலை, Lucerne, Switzerland

06 Jun, 2026
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

மருதங்கேணி, யோகபுரம், பளை, யாழ்ப்பாணம், சென்னை, India

08 May, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

நெடுந்தீவு, கிளிநொச்சி, Zürich, Switzerland

05 Jun, 2022
மரண அறிவித்தல்
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US