கிளிநொச்சியில் அதிபர்கள், ஆசிரியர்களுக்கு எரிபொருள் வழங்க விசேட ஏற்பாடு: ரூபவதி கேதீஸ்வரன்
கிளிநொச்சியில் அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் வழங்க விசேட ஏற்பாடு ஒன்று மேற்கொள்ளப்பட்டுள்ளதாக மாவட்ட அரச அதிபர் ரூபவதி கேதீஸ்வரன் தெரிவித்துள்ளார்.
அதிபர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு எரிபொருள் வழங்குவது தொடர்பில் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இது தொடர்பில் மேலும் அவர் தெரிவிக்கையில்,
எரிபொருள் நிலையங்கள்

“எதிர்வரும் ஞாயிற்றுக் கிழமை குறிப்பிட்ட சில மணித்தியாலயங்களுக்கு மட்டும் இந்த விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி கரைச்சி தெற்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் கரடி போக்கு எரிபொருள் நிரப்பு நிலையம், பூநகரி பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் எரிபொருள் நிலையம் மற்றும் பளை நகரத்தில் அமைந்துள்ள எரிபொருள் நிரப்பு நிலையங்களில் இந்த விசேட ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறிப்பிட்ட சில எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கப்பெறுகின்றது. மாவட்ட அரசாங்க அதிபரால் தெரிவுசெய்யப்பட்ட எரிபொருள் நிரப்பு நிலையங்களில் ஆசிரியர்கள் சில மணித்தியாலயங்களுக்கு ஞாயிற்றுக் கிழமை (26) பெட்ரோலைப் பெற்றுக்கொள்ள முடியும்.

முடிவு
பெட்ரோலிய கூட்டுத்தாபனத்தின் பிராந்திய முகாமையாளாருடன் உரையாடியதாகவும் அதற்கமைவாக வரும் ஞாயிற்றுக் கிழமைக்கு முன்னதாக மேற்படி எரிபொருள் நிரப்பு நிலையங்களுக்கு எரிபொருள் கிடைக்கின்ற போது ஆசிரியர்கள் அதிபர்களுக்கு பெட்ரோல் விநியோகிப்படும்” என குறிப்பிட்டுள்ளார்.

முதல்வர் விஜய் கரூர் செல்லும் விவகாரம் - நீதிபதி சரமாரி கேள்வி, வழக்கை திரும்ப பெற்ற திமுக News Lankasri
சோம்பேறித்தனமாக இருக்கும் 4 ராசியினர் யார்னு தெரியுமா? உங்களது ராசியும் இருக்குதானு பாருங்க Manithan
நான் குட்டை உடை அணிந்த புகைப்படம் வெளியானதும் அவ்ளோ பிரச்சனை... சீரியல் நடிகை பரீனா ஆசாத் Cineulagam
எதிர்நீச்சல் சீரியலில் ஈஸ்வரியாக நடிக்கும் நடிகை ஸ்ரீஜா தனது கணவருடன் எடுத்த அழகிய போட்டோஸ் Cineulagam