எரிபொருள் கோரி ரஷ்ய ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ள ஜனாதிபதி கோட்டாபய
இலங்கை ரஷ்யாவிடம் எரிபொருளை கொள்வனவு செய்ய ஒத்துழைப்பு வழங்குமாறு கோரி, ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமீர் புடினுக்கு கடிதம் ஒன்றை அனுப்பி வைத்துள்ளதாக ஜனாதிபதி செயலகத்தின் தகவல்கள் தெரிவிக்கின்றன.
மெஸ்கோ செல்ல உத்தேசித்துள்ள ஜனாதிபதி

அத்துடன் இந்த விடயம் தொடர்பாக ரஷ்ய ஜனாதிபதியுடன் தொலைபேசியில் கலந்துரையாடவும் ஜனாதிபதி எதிர்பார்த்துள்ளதுடன் மொஸ்கோவுக்கு விஜயம் செய்யவும் உத்தேசித்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
உக்கிரமான எரிபொருள் தட்டுப்பாடு

இலங்கை தற்போது உக்கிரமான எரிபொருள் நெருக்கடியை எதிர்நோக்கி வருகிறது என்பதுடன் அத்தியவசிய சேவைகளுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்பட்டு வருகிறது.
இந்த நிலையில், ரஷ்யாவிடம் இருந்து எரிபொருளை கொள்வனவு செய்வது தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்த இலங்கையின் பிரதிநிதிகள் ரஷ்யா சென்றுள்ளனர்.
Tamizha Tamizha: உடல் பருமனை விரும்பி திருமணம் செய்த கணவர்! நாளடைவில் கணவனால் அனுபவிக்கும் கொடுமை Manithan
சிதைக்கப்பட்ட 10,000க்கும் மேற்பட்ட இலக்குகள்: நிலைகுலைந்து நிற்கும் ஈரான்: அமெரிக்கா தகவல் News Lankasri