நாட்டிற்கு இலவசமாக வழங்கப்படவுள்ள எரிபொருள்-செய்திகளின் தொகுப்பு
நாட்டில் விவசாயம் மற்றும் கடற்றொழிலுக்கான எரிபொருட்களுக்கு கடும் நெருக்கடி நிலை ஏற்பட்டதன் காரணமாக அதனை நிவர்த்தி செய்வதற்கு சீனா தயாராகவுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
அதற்கமைய சீனா விவசாயிகளுக்கு குறிப்பிட்டளவு எரிபொருள் தொகையை இலவசமாக வழங்கவுள்ளதாக விவசாய அமைச்சு குறிப்பிட்டுள்ளது.
இலங்கையில் கடற்தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளுக்கு தேவையாகவுள்ள எரிபொருளை வழங்குவதற்கு கடும் நெருக்கடி நிலவும் நிலையில், அவர்களுக்கான எரிபொருளை சீனா வழங்கவுள்ளதாக கொழும்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
நாட்டில் தற்போது மண்ணெண்ணெய் தட்டுப்பாடு காரணமாக கடற்தொழிலாளர்கள் கடும் பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள நிலையில், தமக்கான நிவாரணங்களை வழங்குமாறு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.
அதேவேளை எரிபொருள் தட்டுப்பாட்டினால் சந்தைகளில் மீன்களின் விலையும் அதிகரித்துள்ளது. அத்துடன் நெல் விவசாயிகளும் எரிபொருள் தட்டுப்பாட்டு நெருக்கடிகளை எதிர்நோக்கியுள்ளனர்.
இது தொடர்பான விரிவான தகவல்களுடன் இன்னும் பல முக்கிய செய்திகளை உள்ளடக்கி வருகிறது இன்றைய தினத்திற்கான முக்கிய செய்திகளின் தொகுப்பு,