எரிபொருள் பிரச்சினைக்கு தீர்வு! அரசாங்கம் வெளியிட்டுள்ள அறிவிப்பு
இலங்கையில் தற்போதைய பொருளாதார நெருக்கடி காரணமாக எரிபொருள் தட்டுப்பாடு காணப்படுகின்றது.
இந்நிலையில் நாட்டின் விவசாய மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக சீனா எரிபொருளை வழங்க இணக்கம் தெரிவித்துள்ளது.
எரிபொருளை வழங்க சீனா இணக்கம்
இதற்கமைய விவசாய மற்றும் கடற்றொழில் நடவடிக்கைகளுக்காக 10.6 மில்லியன் லீட்டர் எரிபொருளை வழங்க சீனா இணக்கம் தெரிவித்துள்ளது.
இவ்வாறு வழங்கப்படும் எரிபொருளில் 7.5 மில்லியன் லீட்டர் எரிபொருள் விவசாய நடவடிக்கைகளுக்காக வழங்கப்படவுள்ளது.
ஜனாதிபதியின் கோரிக்கை
குறித்த எரிபொருள் தொகை எதிர்வரும் டிசம்பர் மாதத்திற்குள் இலங்கைக்கு கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
எனினும், இந்த எரிபொருள் தொகையை நெற்பயிர்ச்செய்கையின் போது வழங்க முடியாத போதிலும் அதனை நெல் அறுவடையின் போது வழங்க நடவடிக்கை எடுப்பதாக விவசாய அமைச்சு தெரிவித்துள்ளது.
விவசாயிகளுக்கு இலவசமாக வழங்கப்படவுள்ள இந்த எரிபொருள் தொகையானது, ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கோரிக்கைக்கு அமைய சீனாவினால் வழங்கப்படவுள்ளது.





16 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 10 மணி நேரம் முன்

நந்தினியால் ஜனனிக்கு ஏற்பட்ட பிரச்சனை, ரவுண்டு கட்டிய குணசேகரன் ஆட்கள்.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam
