யோகட், இறைச்சி என்பவற்றின் விலைகள் அதிகரிப்பு! வெளியானது அறிவிப்பு
இலங்கையில் குளிர்சாதனப் பெட்டியில் வைத்து விற்பனை செய்யப்படும் உணவுப் பொருட்களின் விலைகள் உயர்வடையும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
அகில இலங்கை சிற்றுண்டிச்சாலை உரிமையாளர்கள் சங்கத்தினால் இந்த அறிவித்தல் விடுக்கப்பட்டுள்ளது.
விலை உயர்வு தொடர்பில் அறிவிப்பு
யோகட், ஐஸ்கிறீம் மற்றும் இறைச்சி வகைகள் என்பனவற்றின் விலைகள் உயர்வடையும் என சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.
மின்சார கட்டணங்கள் 75 வீதத்தினால் உயர்வடைதால் இவ்வாறு விலைகள் உயர்வடையும் என தெரிவித்துள்ளார்.
உணவுப்பொதி மற்றும் தேநீர் விலை குறைப்பு
உணவுப்பொதி, தேநீர் விலை குறைப்பு! வெளியானது அறிவிப்பு |
இதேவேளை உணவுப்பொதி மற்றும் தேநீர் என்பவற்றின் விலைகள் குறைக்கப்படுவதாக அண்மையில் சிற்றுணவக உரிமையாளர்கள் சம்மேளனம் தெரிவித்திருந்தது.
இதன்படி தேநீரின் விலை 30 ரூபாவாக குறைக்கப்பட்டதுடன் உணவுப்பொதியொன்றின் விலை 10 வீதத்தினால் குறைக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri
