சிறிகொத்த காணி ஜே.வி.பிக்கு சொந்தமானதா..! எழுந்துள்ள கேள்வி
ஐக்கிய தேசிக் கட்சியின் தலைமை அலுவலகமான சிறிகொத்த காணி ஜே.வி.பிக்கு சொந்தமானதாகும்.ஜே.வி.பியின் மத்திய குழு உறுப்பினரான சாந்த பண்டார சகோதரருக்கு உரித்தானதாகும் என முன்னிலை சோஷலிச கட்சியின் பிரசார செயலாளர் துமிந்த நாகமுவ தெரிவித்துள்ளார்.
யக்கல பகுதியில் அமைந்துள்ள முன்னிலை சோஷலிச கட்சியின் அலுவலகத்திற்கு நேற்றுக் காலை 6 மணியளவில் ஜே.வி.பியை சேர்ந்த சிலர் தாக்குதல் நடத்தியதில் நால்வர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டனர்.
சுமார் 150 க்கும் மேற்பட்டவர்கள் அலுவலகத்திற்குள் புகுந்து தாக்குதல் நடத்தியதாக தாக்குதலுக்குள்ளானவர்கள் தெரிவித்திருந்த நிலையில் அது தொடர்பான செய்தியாளர் சந்திப்பு நேற்று(03) நடைபெற்ற போதே இதனை குறிப்பிட்டுள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு இருந்தால்
தொடர்ந்துரையாற்றிய அவர் ரணில் விக்ரமசிங்க கைது செய்யப்பட்டதில் ரணிலுக்கு பயத்தை ஏற்படுத்தியதோடு ஏனையவர்களுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.

எமது கட்சியின் சிரேஷ்ட உறுப்பினரான வில்சன் என்பவரை கால் மற்றும் கையை பிடித்து வீசியுள்ளனர். அவர் மிகவும் வயதானர்.ஜே.வி.பினருக்கும் அவரை தெரியும். ஆறு பேர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதை பிரதியமைச்சர் மகிந்த சமரசிங்க பார்த்து கொண்டிருந்துள்ளார்.
நீதிமன்ற தீர்ப்பு இருந்தால் எங்களிடம் காட்டுங்கள்.அவ்வாறு ஒன்றும் இல்லை.நீதிமன்ற தீர்ப்பு டில்வின் சில்வாவுக்கு ஏற்றாற் போல் கொடுக்கப்பட்டுள்ளதா? இன்று எமது அலுவலகத்திற்கு விசேட அதிரடிப்படை பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது. இரும்பு கேடர்கள் போடப்பட்டுள்ளது.நாம் இதை விட்டுக் கொடுக்க மாட்டோம்.
ஜே.ஆர்.ஜயவர்த்தன பலாத்காரமாக கைப்பற்றியே சிறிகொத்தவை நிர்மாணித்துள்ளார்.
பின்னர் 89 ஆம் ஆண்டு கலவரத்தில் அவர் கொல்லப்பட்டார்.முடிந்தால் அரசாங்கத்தின் பலத்தை பயன்படுத்தி எடுக்க முடியுமா?அதெல்லாம் செய்ய முடியாது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
இந்தியாவில் கிரிப்டோகரன்சி வைத்திருப்பவர்களுக்கு மகிழ்ச்சியான தீர்ப்பை வழங்கிய நீதிமன்றம் News Lankasri