ராஜீவ் படுகொலை முதல் பேரறிவாளனுக்கு பிணை கிடைத்தது வரை! நடந்தது என்ன? 32ஆண்டு கால பின்னணி(Video)

India Murder Jail High Court
By Kanamirtha Mar 15, 2022 07:18 AM GMT
Report

பேரறிவாளன்! இந்த பெயர் கிட்டத்தட்ட 32 வருடங்களாகப் பலரது வாயால் உச்சரிக்கப்பட்டுக்கொண்டே இருக்கிறது. பேரறிவாளனை விட அவரது தாயாரான அற்புதம்மாளின் பெயரே அதிகம் உச்சரிக்கப்பட்டுக்கொண்டு வந்தது.

யார் இந்த பேரறிவாளன்? இவரது 32 வருடச் சிறை போராட்டத்திற்குக் காரணம் என்ன? அற்புதம்மாளின் 32 வருடப் போராட்டத்திற்குக் கிடைத்த வெற்றி என்ன? என்பது தொடர்பில் ஆராய்கிறது இன்றைய நிஜக்கண்.


1991 மே 21- ஸ்ரீபெரும்புதூரில் தேர்தல் பிரச்சாரத்திற்காக வந்த முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி மனித வெடிகுண்டால் கொல்லப்பட்டார்.

1991 ஜூன் 11- ராஜீவ்காந்தி கொலை செய்யப்பட்ட வழக்கில் பேரறிவாளன் கைது செய்யப்பட்டார். 1991 ஜூன் 14- நளினி ஸ்ரீகரன் என்கிற முருகனும் கைது செய்யப்பட்டார்.

1991 ஜூலை 22- சுதேந்திரராஜா எனும் சாந்தன் கைது செய்யப்பட்டார்.

1998 ஜனவரி 28- ராஜீவ் கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட 26 பேரும் தூக்குத் தண்டனை வழங்கியது சிறப்பு நீதிமன்றம்.

1999 மே 11- சிறப்பு நீதிமன்றத்தின் தீர்ப்பை எதிர்த்துச் செய்யப்பட்ட மேல் முறையீட்டில் சாந்தன், முருகன், பேரறிவாளன், நளினி ஆகிய 4 பேருக்கு அளிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை மட்டும் உச்சநீதிமன்றம் உறுதி செய்தது. 19 பேர் தண்டனைக் காலத்தை முடித்ததாகக் கூறி விடுவிக்கப்பட்டனர். ராபர்ட் பயஸ், ஜெயக்குமார் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

1999 அக்டோபர் 8- தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க வேண்டுமெனக் கோரி 4 பேரும் தாக்கல் செய்த மறு ஆய்வு மனு உச்சநீதிமன்றத்தில் தள்ளுபடி செய்திருந்தது.

1999 அக்.10- தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் ஆளுநருக்குக் கருணை மனுக்களை அனுப்பி வைத்தனர்.

1999 அக்.29: ஆளுநராக இருந்த பாத்திமா பீவி இந்த கருணை மனுக்களைத் தள்ளுபடி செய்தார். தூக்குத் தண்டனை விதிக்கப்பட்ட 4 பேரும் ஆளுநர் தன்னிச்சையாக முடிவெடுத்ததாகக் கூறி உயர்நீதிமன்றத்தை அணுகினர்.

1999 நவம்பர் 25: ஆளுநரின் உத்தரவை ரத்து செய்த உயர்நீதிமன்றம் அமைச்சரவை முடிவின் மீதே ஆளுநர் முடிவெடுக்க வேண்டும் எனக் கூறியது.

2000 ஏப்ரல் 19: இந்த விவகாரம் குறித்த மு. கருணாநிதி தலைமையிலான அமைச்சரவை கூடி விவாதித்தது. இதில் நளினியின் தூக்குத் தண்டனையை ஆயுள் தண்டனையாகக் குறைக்க ஆளுநருக்குப் பரிந்துரைக்க முடிவெடுக்கப்பட்டது.

2000 ஏப்ரல் 24: தமிழக அரசு வெளியிட்ட அரசாணையின் மூலம் நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்டது.

2000 ஏப்ரல் 26: நளினியின் தூக்குத் தண்டனை ஆயுள் தண்டனையாகக் குறைக்கப்பட்ட நிலையில் மீதமிருந்த பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகிய மூவரும் குடியரசுத் தலைவருக்குக் கருணை மனுக்களை அனுப்பினர்.

2000 - 2007: இந்த காலகட்டத்தில் குடியரசுத் தலைவர்களாக இருந்த கே.ஆர். நாராயணன் ஏ.பி.ஜே. அப்துல் கலாம் ஆகியோர் கருணை மனுக்களை நிலுவையில் வைத்தனர்.

2006 செப்டம்பர் 14: பத்தாண்டுகளுக்கு மேல் சிறையிலிருந்த 472 ஆயுள் தண்டனைக் கைதிகளை விடுவிப்பதாகத் தமிழக அரசு அரசாணை வெளியிட்டது. இருந்தாலும் நளினி ராபர்ட் பயாஸ், ஜெயக்குமார், இரவிச்சந்திரன் ஆகியோருக்கு இந்த அரசாணை மூலம் விடுதலை கிடைக்கவில்லை. இதனை எதிர்த்து நளினி நீதிமன்றத்தை நாடினார்.

2008 செப்டம்பர் 24: நளினியின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. மேல் முறையீட்டிலும் இந்த மனு தள்ளுபடி செய்யப்பட்டது.

2007: குடியரசுத் தலைவராக பிரதீபா பாட்டீல் இருந்த காலகட்டத்தில் இந்த கருணை மனு மத்திய அரசுக்கு அனுப்பப்பட்டது.

2008 மார்ச் 19: ராஜீவ்காந்தியின் மகளான பிரியங்கா காந்தி, நளினியை வேலூர் சிறையில் சந்தித்துப் பேசினார்.

2011 ஆகஸ்ட் 12: கருணை மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டதாகக் குடியரசுத் தலைவர் அறிவித்தார். செப்டம்பர் மாதத்தில் அவர்கள் தூக்கிலிடப்படலாம் எனச் செய்திகள் வெளியாயின.

2011 ஆகஸ்ட் 26: தங்களுடைய கருணை மனுக்கள் கடந்த 11 ஆண்டுகளாக நிலுவையில் வைக்கப்பட்டதால் தாங்கள் தினமும் துன்பத்தை அனுபவித்ததாகவும் அதனால், தங்களுடைய மரண தண்டனையை ரத்து செய்ய வேண்டுமென்றும் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் மூவரும் வழக்குத் தொடர்ந்தனர். மனுவை விசாரணைக்கு ஏற்ற நீதிமன்றம், மூவரையும் தூக்கிலிடத் தடை விதித்தது. பிறகு இந்த வழக்கு உச்ச நீதிமன்றத்திற்கு மாற்றப்பட்டது.

2014 பிப்ரவரி 18: பல ஆண்டுக் காலம் மூவரது கருணை மனுக்களும் எந்தக் காரணமுமின்றி நிலுவையிலிருந்ததால் பேரறிவாளன், சாந்தன், முருகன் ஆகியோரது மரண தண்டனை ரத்து செய்யப்படுவதாகச் சதாசிவம் தலைமையிலான மூன்று நீதிபதிகள் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது.

2014 பிப்ரவரி 19: தமிழக அமைச்சரவை எடுத்த தீர்மானத்தின்படி ராஜீவ் கொலையில் குற்றம்சாட்டப்பட்ட அனைவரும் விடுவிக்கப்படுவதாக முதல்வராக இருந்த ஜெயலலிதா அறிவித்தார். குற்றவியல் நடைமுறைச் சட்டப்படி வழக்கை மத்தியப் புலனாய்வுத் துறை விசாரித்திருந்தால் மத்திய அரசுக்குத் தெரிவிக்க வேண்டுமெனக் கூறப்படுவதால் மத்திய அரசுக்குத் தெரியப்படுத்துவதாகவும் மூன்று நாட்களில் 7 பேரும் விடுவிக்கப்படுவார்கள் என்றும் ஜெயலலிதா கூறினார்.

2014 பிப்ரவரி: தமிழக அரசின் முடிவை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தை அணுகியது மத்திய அரசு. 7 பேரையும் மூன்று நாட்களுக்குள் விடுவிக்க தடையாணையும் பெறப்பட்டது. சிபிஐ விசாரித்த வழக்குகளில் மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என்று கூறியது மத்திய அரசு.

2014 ஏப்ரல் 25: இந்த வழக்கில் மத்திய - மாநில அரசின் அதிகாரம் சம்பந்தப்பட்ட விவகாரங்கள் வருவதால் வழக்கு 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாஸன அமர்வுக்கு மாற்றப்பட்டது.

2015 டிசம்பர் 2: மத்திய புலனாய்வுத் துறை விசாரித்த வழக்கின் குற்றவாளிகளை மத்திய அரசின் ஒப்புதல் இல்லாமல் விடுவிக்க முடியாது என இப்ராஹிம் கலிபுல்லா தலைமையிலான 5 பேர் அடங்கிய அமர்வு தீர்ப்பளித்தது. ஆனால் 161வது பிரிவின் கீழ் விடுதலை செய்தால் மத்திய அரசின் ஒப்புதல் தேவையில்லையெனக் கூறியது. இந்தக் கருத்துக்களின் அடிப்படையில் வழக்கைத் தீர்மானிக்க மூன்று பேர் அடங்கிய அமர்வுக்கு வழக்கு மாற்றப்பட்டது.

2016 மார்ச் 2: 7 பேரையும் விடுவிக்க அனுமதி கோரி மத்திய அரசுக்குக் கடிதம் அனுப்பியது தமிழக அரசு.

2018 செப்டம்பர் 6: 7 பேரையும் விடுவிப்பது குறித்து அரசியல் சாஸனத்தில் 161வது பிரிவின் கீழ் ஆளுநர் முடிவெடுக்க வேண்டுமென ரஞ்சன் கோகய் தலைமையிலான உச்சநீதிமன்ற மூவர் அமர்வு தீர்ப்பளித்தது.

2018 செப்டம்பர் 9: 7 பேரையும் விடுதலைச் செய்யக் கோரி தமிழக அரசு பரிந்துரைத்தது. செப்டம்பர் 9- பேரறிவாளனின் தாய் அற்புதம்மாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியைச் சந்தித்து தன் மகன் உள்பட 7 பேரை விடுதலை செய்யப் பரிந்துரைத்ததற்கு நன்றி தெரிவித்தார்.

2019 ஜூலை 1- ராஜீவ்காந்தி படுகொலை வழக்கில் சிறையில் உள்ள 7 பேரை விடுதலை செய்யக் கோரி பரிந்துரைத்ததை ஆளுநருக்கு நினைவூட்டல் கடிதம் அனுப்பவுள்ளதாகச் சென்னை உயர்நீதிமன்றத்தில் தமிழக அரசு தெரிவித்தது.

2020 ஜனவரி 21- குற்றவாளிகள் கருணை மனு மீதான தமிழக அரசின் நிலைப்பாட்டை உச்சநீதிமன்றம் தெரிவிக்க உத்தரவிட்டது.

2021 பிப் 2- தமிழக சட்டசபையில் எழுவர் விடுதலை குறித்து அறிவிக்கப்படவுள்ளதாகத் தகவல்கள் வெளியான நிலையில் ஆளுநர் உரையில் அதுகுறித்த அறிவிப்புகள் எதுவும் வெளியாகவில்லை.

2022 மே 28- பேரறிவாளன் பரோலில் தனது வீட்டிற்கு வந்தார். சிறுநீரக தொற்று உள்ளிட்ட உடல்நலக் குறைவு காரணமாக அவருக்கு பரோல் வழங்குமாறு தாய் அற்புதம்மாள் கேட்டுக் கொண்டதற்கிணங்க 30 நாட்கள் பரோல் வழங்க உத்தரவிடப்பட்டது.

தொடர் சிகிச்சையால் அவருக்கு 8 முறை பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது. ஜனவரி 20 ஆம் தேதியுடன் பரோல் முடிவடையவிருந்த நிலையில் மேலும் 30 நாட்கள் பரோல் வழங்கியது தமிழக அரசு.

2022 பிப்ரவரி 21- 10ஆவது முறையாகப் பேரறிவாளனுக்கு பரோல் நீட்டிப்பு வழங்கியது.

2022 மார்ச் 9- தன்னை விடுதலை செய்யக் கோரி பேரறிவாளன் உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்ய மனு விசாரணைக்கு வந்தது. பேரறிவாளன் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர் கோபால் சங்கரநாராயணன், 302வது பிரிவின் கீழ் இழைக்கப்பட்ட குற்றங்கள் தொடர்பாக ஆளுநர்கள் பல முறை முடிவெடுத்திருக்கிறார்கள்' என்பதைச் சுட்டிக்காட்டினார்.

பேரறிவாளனுக்கு மூன்று முறை சிறை விடுப்பு அளிக்கப்பட்டிருந்தும் அவர் எவ்வித தவறுகளும் செய்யவில்லை என்பதையும் சங்கரநாராயணன் சுட்டிக்காட்டினார். மேலும் தண்டனைக் காலத்தில் அவருடைய நடத்தை சிறப்பாக இருந்ததையும் அவர் தனது கல்வித் தகுதியை வளர்த்துக் கொண்டது குறித்தும் சிறையில் உள்ள நூலகத்தில் உதவிசெய்தது குறித்தும் வழக்கறிஞர் சுட்டிக்காட்டினார்.

மகாத்மா காந்தி கொலைவழக்கைச் சுட்டிக்காட்டிய ராகேஷ் த்விவேதி, அந்த வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற கோபால் கோட்சே தண்டனை குறைப்புப் பெற்று 14 ஆண்டுகளில் விடுவிக்கப்பட்டார்.

ஆனால், பேரறிவாளன் 32 ஆண்டுகளைச் சிறையில் கழித்திருக்கிறார் என்று குறிப்பிட்டார். முடிவில், 32 ஆண்டுகளுக்குப் பிறகு பேரறிவாளனுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.

மரண அறிவித்தல்

மலேசியா, Malaysia, தெல்லிப்பழை, கண்டி

26 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 10ம் வட்டாரம், மன்னார், கண்டி

03 Jul, 2015
6ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

ஒமந்தை, Birmingham, United Kingdom

23 Jun, 2025
மரண அறிவித்தல்

சுழிபுரம், சுதுமலை, வவுனியா, Colombes, France

30 Jun, 2025
மரண அறிவித்தல்

புளியங்கூடல், கல்விளான், விசுவமடு, கொக்குவில், Paris, France, Basel, Switzerland

27 Jun, 2025
மரண அறிவித்தல்

வடமராட்சி, London, United Kingdom

23 Jun, 2025
12ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 12ம் வட்டாரம், கனடா, Canada

02 Jul, 2013
8ம் ஆண்டு நினைவஞ்சலி
31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்

கோண்டாவில் கிழக்கு

02 Jun, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி
10ம் ஆண்டு நினைவஞ்சலி

இளவாலை முள்ளானை, Mississauga, Canada

24 Jun, 2015
மரண அறிவித்தல்

இளவாலை, Scarborough, Canada

25 Jun, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில், Montreal, Canada, Toronto, Canada

30 Jun, 2025
8ம் ஆண்டு நினைவஞ்சலி

கோண்டாவில் கிழக்கு, Mississauga, Canada

01 Jul, 2017
மரண அறிவித்தல்

பருத்தித்துறை, தமிழீழம், சென்னை, India

30 Jun, 2025
மரண அறிவித்தல்

ஏழாலை வடக்கு, Drancy, France

28 Jun, 2025
15ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

பருத்தித்துறை, Wembley, United Kingdom

05 Jul, 2022
10ம் ஆண்டு நினைவஞ்சலி

திருநெல்வேலி, ஜேர்மனி, Germany

08 Jul, 2015
13ம் ஆண்டு நினைவஞ்சலி
3ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், யாழ் பாண்டியன்தாழ்வு, Jaffna

04 Jul, 2022
மரண அறிவித்தல்

சரவணை கிழக்கு, நியூ யோர்க், United States, கோண்டாவில் கிழக்கு

30 Jun, 2025
10ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரெழு, கிளிநொச்சி

01 Jul, 2015
மரண அறிவித்தல்

கொக்குவில், Livry-Gargan, France

23 Jun, 2025
2ம் ஆண்டு நினைவஞ்சலி

ஊரங்குணை, குப்பிளான், சென்னை, India, Toulouse, France

24 Jun, 2023
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, கொழும்பு, Brampton, Canada

29 Jun, 2025
மரண அறிவித்தல்
2ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை தீருவில், London, United Kingdom

25 Jun, 2023
மரண அறிவித்தல்
14ம் ஆண்டு நினைவஞ்சலி

கரவெட்டி கிழக்கு, சிட்னி, Australia, கொழும்பு

28 Jun, 2011
1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 9ம் வட்டாரம், திருநகர், Scarborough, Canada

01 Jul, 2024
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US