வாகன சாரதியாக இருந்து, நாட்டுக்கே சாரதியானவர்!
உலகின் மிகவும் அதிகாரமிக்க தலைவர்களில் ஒருவரான ரஷிய அதிபர் விளாடிமிர் புடின் (Vladimir Putin) வாடகை கார் ஒன்றின் சாரதியாக பணியாற்றியுள்ளதாக தெரிவிக்கப்படும் தகவல் தற்போது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.
சோவியத் ஒன்றியம் வீழ்ச்சி குறித்த ஆவணப்படம் ஒன்றிலே புடின் இதனை தெரிவித்துள்ளார்.
குறித்த ஆவணப்படத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது,
“உண்மையை சொல்ல வேண்டும் என்றால் இது குறித்துப் பேசுவதில் எனக்கு விருப்பமில்லை. ஆனால், துரதிர்ஷ்டவசமாக அதுதான் நடந்தது. அதுதான் உண்மை. சோவியத் ஒன்றியத்தின் சரிவு என்பது வரலாற்று, அது ரஷியாவின் முடிவை உணர்த்துகிறது.
30 ஆண்டுகளுக்கு முன் ஏற்பட்ட சோவியத் யூனியன் வீழ்ச்சி என்பது பெரும்பாலான பொதுமக்களுக்கு மிகப் பெரிய சோகமாகவே இருந்தது.
அந்த நேரத்தில் நான் கூடுதல் பணம் சம்பாதிக்க வேண்டியிருந்தது. இதற்காக நான் தனியார் நிறுவனத்தில் வாடகை கார் ஒன்றின் சாரதியாக பணியாற்றினேன் என்று புடின் தெரிவித்துள்ளார்.
உலகின் மிகவும் அதிகாரமிக்க தலைவர்களில் ஒருவராக அறியப்படும் புதின் 30 ஆண்டுகளுக்கு முன்பு பொருளாதார நெருக்கடியால் வாடகை கார் ஒன்றின் சாரதியாக பணியாற்றினார் என்கிற தகவல் தற்போது வியப்பை ஏற்படுத்தியுள்ளது.