மாணவியின் தங்கச் சங்கிலியை பறித்த கொள்ளையனுடன் சண்டையிட்ட தோழி
அனுராதபுரம் நகரில் பகுதி நேர வகுப்பில் கலந்துக்கொண்ட மாணவி இடைவேளையில் குபிச்சக்குளம் குளத்திற்கு அருகில் சென்று செல்ஃபி புகைப்படம் எடுத்துக்கொண்டிருந்த போது, அவர் கழுத்தில் அணிந்திருந்த தங்கச் சங்கிலியை கொள்ளையன் பறித்துச் சென்றுள்ளார். இந்த சம்பவம் இன்று மதியம் நடந்துள்ளது.
அப்போது மாணவியின் தோழி அந்த கொள்ளையனை பிடிக்க, அந்த நபருடன் சண்டையிட்டுள்ளார். அப்போது சந்தேக நபரின் செல்போன் தவறி கீழே விழுந்துள்ளதுடன் சந்தேக நபர் தப்பிச் சென்றுள்ளார்.
கலேன்பிந்துனுவெவ பிரதேசத்தில் இருந்து அனுராதபுரம் நகருக்கு வந்திருந்த உயர் தர வகுப்பு மாணவியின் 70 ஆயிரம் ரூபாய் பெறுமதியான தங்கச் சங்கிலி பறித்துச் செல்லப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மற்றுமொரு மாணவி தனது தோழியின் தங்கச் சங்கிலியை பறித்துச் சென்ற நபரை துரத்திச் சென்று அவருடன் சண்டையிட்டுள்ளதுடன் அப்போது அந்த நபரிடம் இருந்து தவறி விழுந்த செல்போனை பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
பொலிஸாருக்கு கிடைத்துள்ள செல்போன் ஊடாக சந்தேக நபரை கைது செய்வதற்காக மேலதிக விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.





குக் வித் கோமாளி டைட்டில் ஜெயித்தது இவர்தான்.. மொத்த ஷோவும் ஸ்கிரிப்ட் தானா? ராஜூ விளக்கம் Cineulagam

மறைந்த ரோபோ ஷங்கர் குடும்பம் பட்ட கஷ்டம்.. மாதம் இவ்வளவு லட்சம் EMI கட்டவேண்டுமா? வெளிவந்த உண்மை Cineulagam
