இலங்கை வந்துள்ள பிரான்ஸ் சுற்றுலா முகவர்கள்
இலங்கையின் சுற்றுலா நடவடிக்கைகளை ஊக்குவிக்கும் நோக்கில் பிரான்ஸ் நாட்டை சேர்ந்த 80 சுற்றுலாத்துறை முகவர்கள் இன்று காலை கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்தனர்.

இவர்கள் கண்டி, பெந்தோட்டை, கொழும்பு ஆகிய பிரதேசங்களுக்கு விஜயம் செய்து, அங்குள்ள ஹோட்டல் கட்டமைப்புகளை பார்வையிட்ட பின்னர் பிரான்ஸ் நாட்டில் இருந்து இலங்கைக்கு சுற்றுலாப் பயணிகளை அழைத்து வரவுள்ளனர்.
இந்த சுற்றுலாத்துறை முகவர்கள் பிரான்ஸின் பிராங்பேர்ட் விமான நிலையத்தில் இருந்து ஸ்ரீலங்கன் விமான சேவையின் யு.எல்.501 விமானத்தில் இன்று காலை 7.25 அளவில் கட்டுநாயக்க வமான நிலையத்தை வந்தடைந்தனர்.


இவர்களை வரவேற்பதற்காக ஸ்ரீலங்கன் விமான சேவை, சுற்றுலா ஹோட்டல்களின் பிரதிநிதிகள், சுற்றுலாப் பயணிகளை ஏற்றிச் செல்லும் பேருந்து சேவை நிறுவனங்களின் பிரதிநிதிகள் மற்றும் இலங்கை சுற்றுலா ஊக்குவிப்பு பணியகத்தின் அதிகாரிகள் கட்டுநாயக்க விமான நிலையத்தின் வருகை தரும் முனையத்திற்கு சென்றிருந்தனர்.
பிக்பாஸ் 9 வீட்டில் இருந்து வெளியேறியுள்ள கனி மொத்தமாக வாங்கிய சம்பளம்... எவ்வளவு தெரியுமா? Cineulagam
டிசம்பரில் ஜாக்போட்.. 18 மாதங்களுக்கு பின் அதிர்ஷ்டத்தை கொட்டிக் கொடுக்கும் செவ்வாய் பெயர்ச்சி Manithan