பிரதமர் ஹரினியை சந்தித்த பிரான்ஸ் பிரதிநிதி
இலங்கைப் பிரதமர் ஹரினி அமரசூரிய, பிரான்ஸின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் Anne-Marie Descotesவை சந்தித்து கலந்துரையாடியுள்ளார்.
கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் நேற்று (11) இடம்பெற்ற இச்சந்திப்பின் போது பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு தொடர்புகளை வலுப்படுத்தல் பற்றி கலந்துரையாடப்பட்டுள்ளது.
இதன்போது, இரு நாடுகளுக்கு இடையிலான தொடர்புகளை பலப்படுத்துவதற்காக பிரான்ஸ் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புகள் பற்றி பொதுச்செயலாளர் Descotes விளக்கினார்.
ஒப்பந்தத்தின் முக்கியத்துவம்
அத்துடன், சமுத்திரவியல் ஆய்வு தொடர்பான பிராந்திய நிலைய (RCMS) ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் பற்றியும் மேலும் பல்வேறு துறைகளில் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய வாய்ப்புகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டுள்ளது.

பிரான்ஸ் நாட்டுடனான தொடர்புகளை வலுவாக முன்னெடுத்து செல்ல இலங்கை கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்திய பிரதமர், கல்வி, விசேடமாக கல்வியின் தரம், தொழிற்கல்வியை வலுவூட்டல், காலநிலை மாற்றங்கள், சூழல் பாதுகாப்பு மற்றும் சமுத்திரவியல் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல துறைகள் தொடர்பிலும் ஒன்றிணைந்து செயற்படல் குறித்து பொதுச்செயலாளருடன் கலந்துரையாடப்பட்டுள்ளது.
| நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
சிந்தாமணியால் சிக்கலில் சிக்கப்போகும் ரோஹினி, எப்படி தெரியுமா?.. சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam
தங்களது மனைவியுடன் அய்யனார் துணை சீரியல் சகோதரர்கள்... என்ன செய்துள்ளார்கள் பாருங்க, கலாட்டா கன்பார்ம் Cineulagam
சரவணன் சொன்ன வார்த்தை குமுறலில் மயில் எடுத்த அதிரடி முடிவு, ஷாக்கான மீனா.. பாண்டியன் ஸ்டோர்ஸ் எபிசோட் Cineulagam