தனித்து களமிறங்கும் மைத்திரி அணி
அடுத்து வரும் எந்தத் தேர்தலாக இருந்தாலும் தனித்துப் போட்டியிடுவதற்கு கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் சிரேஷ்ட உப தலைவரான பேராசிரியர் ரோஹண லக்ஷ்மன் பியதாச (Rohana Lakshman Piyadasa) தெரிவித்தார்.
இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாட்டில் இன்று பொருட்களின் விலைகள் அதிகரித்துள்ளன. தேங்காய் ஒன்றின் விலை 100 ரூபாய். 5 ஆயிரம் ரூபாவை அச்சிட்டு வழங்குவதால் பெரிதாக எதுவும் நடக்கப்போவதில்லை. குறிப்பிட்டளவு அரச ஊழியர்களே இருக்கின்றனர். சாதாரண மக்களுக்கு 5 ஆயிரம் ரூபா வழங்கப்படவில்லை. அவர்கள் என்ன செய்வார்கள்?
நாட்டில் ஆறரை இலட்சம் பேர் இரவு உணவை உட்கொள்ளாது நித்திரைக்குச் செல்கின்றனர் என நிபுணர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர். குழந்தைகளுக்கும் போஷாக்குக் கிடைப்பதில்லை. என்ன செய்வது எனச் சுதந்திரக் கட்சியிடம் பலரும் கேட்கின்றனர். நாம் தெளிவானதொரு முடிவை எடுத்துள்ளோம்.
அடுத்து நடைபெறும் எந்தவொரு தேர்தலாக இருந்தாலும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைமையில் கூட்டணி அமைத்துப் போட்டியிடுவதற்குக் கட்சியின் மத்திய செயற்குழு அனுமதி வழங்கியுள்ளது என தெரிவித்துள்ளார்.





6 ஆண்டுகால ஐ.நா மைய அரசியல்: பெற்றவை? பெறாதவை...... 2 மணி நேரம் முன்

7ஆம் அறிவு படத்தில் வில்லனாக நடித்த இந்த நடிகரை நினைவிருக்கிறதா? இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா, இதோ பாருங்க Cineulagam

சித்திரவதை செய்யப்பட்டு கடலில் தூக்கி எறியப்பட்ட புலம்பெயர்ந்தோர்: அதிரவைக்கும் ஒரு செய்தி News Lankasri
