வவுனியாவில் இலவச விசேட தொழில் வழிகாட்டல் செயலமர்வு
வவுனியா பிரதேச செயலகமானது மனிதவலு, வேலைவாய்ப்பு திணைக்களம் மற்றும் இலங்கை தொழில்நுட்ப பல்கலைக்கழகம் என்பவற்றுடன் இணைந்து விசேட தொழில் வழிகாட்டல் நிகழ்நிலை செயலமர்வு ஒன்றினை ஒழுங்கமைப்பு செய்துள்ளதாக வவுனியா பிரதேச செயலாளர் தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்நிலை செயலமர்வு எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (19.06.2022) மாலை.7.00.மணிக்கு ZOOM ஊடாக நிகழ்நிலையாக நடாத்த ஒழுங்கமைப்பு செய்யப்பட்டுள்ளது.
செயலமர்வு
இந்த நிகழ்நிலை செயலமர்வு தொடர்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, இம்முறை க.பொ.த. சாதாரண தர பரீட்சைக்கு தோற்றிய மற்றும் தோற்றவுள்ள மாணவர்கள் அவர்களின் பெற்றோர் மற்றும் தொழில் வழிகாட்டல் துறையில் ஈடுபட்டிருப்போர், அனைவரும் இந்நிகழ்வில் பங்குபற்ற முடியும்.
தொழில் வழிகாட்டல் துறையில் விசேட நிபுணத்துவம் வாய்ந்த வளவாளர்கள் கலந்து கொண்டு பயனுறுதிமிக்க ஆலோசனை வழிகாட்டல்களை வழங்க உள்ளனர் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலதிக தகவல்
இந்த செயலமர்வில் பங்குபெற விரும்புபவர்கள் கீழ்வரும் Google படிவம் ஊடாக உங்கள் விபரங்களை பதிவு செய்து Zoom link இணை பெற்றுக் கொள்ளலாம். https://forms.gle/3U7FWk6FdXT8LxxS6
மேலதிக தகவல்களுக்கு 076 601 88 62/077 6151314 என்ற தொலைபேசி இலக்கங்கள் ஊடாக தொடர்புகொள்ள முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.




