குறைந்த வருமானம் பெறும் குடும்பங்கள் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கை
குறைந்த வருமானம் பெறும் குடும்பங்களுக்கு இலவச அரிசி வழங்கும் அரச திட்டத்தில் சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் தொடர்பில் அவசர விசாரணைகளை மேற்கொள்ளுமாறு பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் சம்பந்தப்பட்ட மாவட்ட செயலாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளார்.
இதன் பின்னணியில் பல பிரதேசங்களில் காலாவதியான அரிசி விநியோகிக்கப்படுவதாகவும் அரிசிக்கு பணம் அறவிடப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
கண்காணிப்புக்குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை
இந்த வேலைத்திட்டம் முறைகேடுகள் இன்றி முன்னெடுக்கப்படுவதை உறுதி செய்வதற்காக அமைச்சு மட்டத்தில் கண்காணிப்புக் குழுவொன்றை நியமிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என பொது நிர்வாக அமைச்சின் செயலாளர் தெரிவித்துள்ளார்.
தரம் குறைந்த அரிசி விநியோகிக்கப்படும் சம்பவங்கள் மற்றும் அரசாங்கத்தினால் வழங்கப்படும் இலவச அரிசிக்கு பணம் அறவிடப்படும் சம்பவங்கள் தொடர்பிலும் கடந்த சில நாட்களாக செய்திகள் வெளியாகி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP குழுவில் இணையுங்கள் JOIN NOW |