யாழ்ப்பாணத்தில் மனத்தூய்மைக்கான இலவச தியான பயிற்சி ஆரம்பம்
யாழ்ப்பாணத்தில் (Jaffna) மனத்தூய்மைக்கான இலவச தியான பயிற்சி மே மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
சுமார் 2500 ஆண்டுகளுக்கு முன்னர் கௌதம புத்தரால் வடிக்கப்பட்டு, பர்மாவைச் சேர்ந்த ஊ.பா. கினிடமிருந்து கற்று, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் விபாசனா கற்று தந்த ச.கோயங்காவினால் நடத்தப்படும் மனத்தூய்மைக்கான தியான முறை பற்றி அறிமுகம் குருஜி எஸ். என். கோயங்காவின் வழிகாட்டலில் யாழ். பாத்திமா ரிட்ரீட் ஹவுஸ், பண்டதரிப்பில் நடைபெற உள்ளது.
தியான பயிற்சி
குறித்த தியான பயிற்சி வகுப்புக்கள் மே மாதம் 27ஆம் திகதி முதல் ஜுன் 07ஆம் திகதி வரை பத்து நாட்கள் இடம்பெறவுள்ளதுடன் இவர்களது இலவசப் தியான பயிற்சி நெறியில் 18 வயதுக்கு மேற்பட்ட அனைவரும் கலந்துகொள்ளலாம் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், விபாசனா தியான மையத்தில் இணைந்துகொள்ள விரும்புவர்கள் 0716439454, 0773504491, 0774935850 என்ற தொலைபேசி இலக்கங்களுக்கு தொடர்புகொள்ளுமாறும் www.sobha.dhamma என்ற இணையத்தில் முன்பதிவுகளை மேற்கொள்ளுமாறும் குறிப்பிடப்படுகிறது.
அத்துடன், மனத்தூய்மைக்கான இந்த இலவச தியான பயிற்சி நெறியில் அனைவரும் கலந்துகொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.

ஒரு தீவு இரு நினைவு நாட்கள் 2 நாட்கள் முன்

500 Invar ஏவுகணைகளை வாங்கும் இந்தியா - பாக்., சீனாவிற்கு பீதியை கிளப்பும் உள்ளூர் தயாரிப்பு News Lankasri

துருக்கியுடன் உறவுகளை இந்தியா துண்டித்தால்... இந்தப் பொருட்களின் விலை ராக்கெட் வேகத்தில் உயரும் News Lankasri

Brain Teaser Maths: சிதறும் சிந்தனை கொண்டவரால் இப்புதிரை தீர்க்க முடியாது-உங்களுக்கு முடியுமா? Manithan
