மூதூரில் நடாத்தப்பட்ட இலவச மருத்துவ முகாம்
திருகோணமலை (Trincomalee) - மூதூரில் சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு இலவச மருத்துவ முகாம் ஒன்று நடாத்தப்பட்டுள்ளது.
குறித்த மருத்துவ முகாம், இன்று (08.05.2024) மூதூர் கலாச்சார மண்டபத்தில் மூதூர் பிரதேச செயலகம் மற்றும் மூதூர் சமுர்த்தி பிரதேச அமைப்பின் ஏற்பாட்டில் நடைபெற்றுள்ளது.
மூதூர் தளவைத்தியசாலையினுடைய வைத்தியர் என். நிப்ராஸ் மற்றும் தாதி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டு இந்த மருத்துவ முகாமை செயற்படுத்தியுள்ளனர்.
மருத்துவ ஆலோசனைகள்
இதன்போது, நீரிழிவு, இரத்த அழுத்தம், தொற்றா நோய்கள், கொலஸ்ட்ரோலுக்கான இரத்த பரிசோதனைகளும், மருத்துவ ஆலோசனைகளும் வழங்கப்பட்டுள்ளது.
இந்நிகழ்வில், பிரதேச செயலக பிரதி திட்டமிடல் பணிப்பாளர், மூதூர் பிரதேச சபையினுடைய செயலாளர், பிரதேச செயலக நிர்வாக உத்தியோகத்தர் மற்றும் சமுர்த்தி தலைமை முகாமையாளர் ஆகியோர் கலந்துகொண்டுள்ளனர்.
செய்தி - ஹஸ்பர்
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |