மட்டக்களப்பில் இலவச கணினி வகுப்புகள் ஆரம்பித்து வைப்பு
மட்டக்களப்பில் (Batticaloa) உள்ள முஸ்லீம் பிரதேசங்களுக்கு இலவச கணினி வகுப்புகள் நாடாளுமன்ற உறுப்பினரும் முன்னாள் அமைச்சருமான தம்மிக்க பெரேராவினால் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
குறித்த கணினி வகுப்புக்கள் மட்டக்களப்பு மாவட்டத்தில் உள்ள ஏறாவூர், காத்தான்குடி மற்றும் ஓட்டமாவடி பகுதிகளில் இடம்பெறவுள்ளது.
வறுமையான மாணவர்கள்
இதில் கணினி துறையில் கல்வி பயில விரும்பும் வறுமையான மாணவர்கள் தங்களது கணணி அறிவை விருத்தி செய்யும் நோக்குடன் இலவச கல்வி திட்டத்தின் ஊடாக ஒவ்வொரு நிலையங்களுக்கும் சுமார் இருபது கணினிகள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிகழ்வில்
மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சாகிர் மௌலானா மற்றும் முன்னாள் கிழக்கு மாகாண ஆளுநர் ஹிஸ்புல்லா, ஏறாவூர் நகர பிரதேச செயலாளர் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.