இலகு விசா நடைமுறை தொடர்பில் பொது மக்களுக்கு எச்சரிக்கை
மத்துகம பிரதேசத்தில் WhatsApதொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி போலி வீசா தயாரித்து சவூதி அரேபியாவுக்கு அனுப்பிய நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கடந்த 26ஆம் திகதி மாகஸ்வத்தை, யட்டியன, அகலவத்தை பகுதியைச் சேர்ந்த 31 வயதுடைய நபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார். காலி, உடுகம பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் செய்த முறைப்பாட்டின் அடிப்படையில் சந்தேகநபர் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
ஏமாற்றப்பட்ட நபர்
அனைத்து பயணப்பொதிகளையும் எடுத்துக்கொண்டு வெளியூர் செல்வதற்காக மத்துகம பிரதேசத்திற்கு வருமாறு கூறி முறைப்பாட்டாளரை சந்தேக நபர் வெறிச்சோடிய பகுதிக்கு அழைத்துச் சென்றுள்ளார்.
அவ்வாறு அழைத்து சென்று 60,000 ரூபா பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளதாக முறைப்பாட்டில் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
அகலவத்தை மற்றும் பதுரலிய பிரதேசங்களில் சந்தேகநபரால் இவ்வாறான பண மோசடிகள் மற்றும் கொள்ளைகள் இடம்பெற்றுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளது.
பொலிஸார் விசாரணை
இதுபோன்று ஏனைய பிரதேசங்களிலும் பண மோசடிகள் மற்றும் கொள்ளைகள் இடம்பெற்றுள்ளதா என்பது தொடர்பில் விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இலகுவாக விசா வழங்குவதாக யாராவது கூறினால் நம்பி ஏமாற வேண்டாம் என பொலிஸார் பொது மக்களிடம் கேட்டுக்கொண்டுள்ளனர்.

இயற்கை விதியும் ஈழத் தமிழர் அரசியலும் 2 நாட்கள் முன்

இந்தியா-பாக் பதற்றம் தீவிரம்: பாகிஸ்தான் அரசு ஊடகம் வெளியிட்ட அதிர்ச்சியூட்டும் செய்தி News Lankasri
