இலங்கையில் வரி செலுத்துவோரை குறிவைத்து மோசடி! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
இலங்கையில் வரி செலுத்துவோரை (TIN) இலக்கங்களை குறிவைத்து இடம்பெறும் மோசடி குறித்து இலங்கை கணினி அவசரநிலை தயார்நிலைக் குழு (CERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.
உள்நாட்டு இறைவரித்திணைக்கள (IRD)அதிகாரிகளாக ஆள்மாறாட்டம் செய்து, போலியான இணைப்புகள் மூலம் வரி செலுத்துவோரை பணம் செலுத்துமாறு ஏமாற்றும் மோசடி குறித்து கண்டறியப்பட்டுள்ளது.
கொழும்பில் கண்டுபிடிக்கப்பட்ட இரகசிய ஆயுதக்கிடங்கு! இளம் தம்பதியினர் தலைமறைவு - அவசர உதவிபோரும் பொலிஸார்
0113 என்ற எண்ணில் தொலைபேசி அழைப்பு
உள்நாட்டு இறைவரித்திணைக்களத்தின் தலைமை அலுவலகத்திலிருந்து பேசுவதாகக்கூறி, “0113” என்ற எண்ணில் வந்த தொலைபேசி அழைப்பு தொடர்பில் தொழிலதிபர் ஒருவர் செய்த முறைப்பாட்டிற்கமைய இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த அடையாளம் தெரியாத நபர் அந்த தொழிலதிபரை அவரது பெயரைக் குறிப்பிட்டு வரி செலுத்துவோர் அடையாள எண்ணை (TIN) கேட்டுள்ளார்.
இதன்பின்னர், தொழிலதிபர் வரிகளை செலுத்தத்தவறிவிட்டதாகவும், உடனடியாகப் பணம் செலுத்தாவிட்டால் சட்ட நடவடிக்கையை எதிர்கொள்ள நேரிடும் என்றும் கூறியுள்ளார்.
பணம் செலுத்துவதை எளிதாக்க, பணம் செலுத்துவதற்கான இணைப்பு அனுப்பப்படும் என்று கூறி, தொழிலதிபரின் வாட்ஸ்அப் எண் அல்லது மின்னஞ்சல் முகவரி கோரப்பட்டுள்ளது.
பொதுமக்களுக்கு எச்சரிக்கை
இருப்பினும், சந்தேகமடைந்த தொழிலதிபர், அழைப்பைத் துண்டித்துவிட்டு பின்னர் அவர் அந்த எண்ணிற்கு மீண்டும் அழைக்க முயன்றபோது, எந்தப் பதிலும் இல்லை. சில நிமிடங்களுக்குப் பிறகு, அதே எண்ணிலிருந்து அவருக்கு மற்றொரு அழைப்பு வந்துள்ளதுடன், சட்டரீதியான விளைவுகளைத் தவிர்க்க கட்டணத்தை செலுத்துமாறு எச்சரித்ததாக கூறப்படுகிறது.

இதனையடுத்து இலங்கை CERTயிடம் மேற்கொள்ளப்பட்ட முறைப்பாட்டிற்கமைய, உள்நாட்டு இறைவரித்திணைக்களம் வரி செலுத்துவோருக்கு பணம் செலுத்துவதற்கான எந்தவொரு இணைப்புகளையும் அனுப்புவதில்லை என்பது தெரியவந்துள்ளது.
எனவே இறைவரித்திணைக்களத்திலிருந்து வருவதாகக்கூறும் அழைப்புகளின் நம்பகத்தன்மையைச் சரிபார்க்குமாறும், TIN எண்கள் உட்பட தனிப்பட்ட வரித் தகவல்களை அறியாத நபர்களுடன் பகிர்வதைத் தவிர்க்குமாறும் அந்த அமைப்பு பொதுமக்களை வலியுறுத்தியுள்ளது.
மேலும், வரி செலுத்துவோர் வரி தொடர்பான தகவல்களை உத்தியோகபூர்வ வழிமுறைகள் மூலம் மட்டுமே பெற வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ளது.
சொந்த நட்சத்திரத்தில் ராகு பெயர்ச்சி... நிதி நிலையில் எதிர்பாராத அதிர்ஷ்டம் பெறும் 3 ராசிகள்! Manithan