தொடருந்து பயணச்சீட்டு முன்பதிவுகளில் மோசடி - இணையத்தில் பரவும் காணொளி
சுற்றுலா பயணிகளுக்கு என முன்பதிவு செய்த தொடருந்து பயணசீட்டுக்களுக்கான ஆசனங்களை வேறு பயணிகளுக்கு வழங்கிய சம்பவம் தொடர்பான காணொளி ஒன்று சமூ ஊடகங்களில் பரவி வருகிறது.
குறித்த சம்பவம் நேற்றைய தினம்(08.10.2025) பட்டிபொல தொடருந்து நிலையத்தில் பதிவாகியுள்ளது.
சுற்றுலாப் பயணிகள்
குறித்த சம்பவம் தொடர்பில் விளக்கம் வழங்கியுள்ள ஆசனங்களை முன்பதிவு செய்த நபர்,
நாங்கள் 12 பேர். TCR முன்பதிவு செய்த 11 சுற்றுலாப் பயணிகள் உட்பட தொடருந்தில் செல்ல திட்டமிட்டோம். எங்களில் 9 பேர் ஹேர்டன் சமவெளிக்கு சென்றிருந்தோம்.
எனினும் எங்களுடன் 3 பேர் வர விரும்பவில்லை. எனவே நான் அவர்களுக்கு தொடருந்து இருக்கைகளுடன் கூடிய 2 பயணசீட்டுக்களை வழங்கினேன். எனவே குறித்த சுற்றுலாப் பயணிகள் 3 பேர் நானுஓயாவிலிருந்து ஏறினார்கள்.
தொடருந்து பட்டிபொல நிலையத்திற்கு வந்தபோது, மீதமுள்ள ஆசன முன்பதிவுக்கமைய தொடருந்தில் இருந்த சுற்றுலாப் பயணிகளிடமிருந்து பயணசீட்டுக்களை பெற்றேன்.
நாங்கள் நானுஓயாவிலிருந்து ஏறாததால், குறித்த தொடருந்து நிலையத்தில் எங்களுக்கு முன்பதிவு செய்யப்பட்ட இருக்கைகளை வேறொருவருக்குக் கொடுத்துள்ளனர் என தொடருந்து பொறுப்பதிகாரி கூறியிருந்தார்.
இது பாரதூரமான சம்பவம். பின்னர் நான் பட்டிபொல நிலைய அதிகாரியிடம் பேசினேன். பின்னர் நாங்கள் ஏறினோம். எங்கள் இருக்கைகளில் இருந்த பயணிகள் எழுந்து நின்று பயணம் செய்தனர்.
இந்த மாஃபியாக்களின் செயற்பாடு வேறு ஒருவருக்கு சட்டவிரோதமாக வழங்கப்படுகின்றன” என கூறியுள்ளார்.





தமிழகத்தின் சட்ட ஒழுங்கும் கட்சி அரசியலும் 3 நாட்கள் முன்

சேரனை தேடி அலையும் தம்பிகள், போலீஸ் நிலையத்தில் கதறி அழும் சோழன், கடைசியில்... அய்யனார் துணை சீரியல் புரொமோ Cineulagam

பிரச்சனை கிளப்ப நினைத்த ரோஹினியால் மீனாவிற்கு கிடைத்த பரிசு... சிறகடிக்க ஆசை சீரியல் சூப்பர் புரொமோ Cineulagam
