இணையம் வழியாக பணம் மோசடி - வங்கிக்கணக்கில் சிக்கிய இலட்சக்கணக்கான பணம்
இணையம் வழியாக பணம் மோசடி செய்த சந்தேகநபர் ஒருவரை கணினி குற்ற புலனாய்வுப்பிரிவினர் கைது செய்துள்ளனர்.
இணையம் வழியாக பணம் சம்பாதிக்க முடியும் என்று கூறி ஒரு கணக்கில் பணத்தை மோசடியாக வரவு வைத்ததாக சந்தேகநபருக்கு எதிராக கிடைத்த முறைப்பாட்டின் அடிப்படையில் கைது செய்யப்பட்டுள்ளார்.
குற்ற புலனாய்வுப்பிரிவினர் மேலதிக விசாரணை
கணினி குற்ற புலனாய்வுப் பிரிவினர் விசாரணை இதனையடுத்து முன்னெடுக்கப்பட்ட விசாரணையில் போது, ஒரு டெலிகிராம் குழுவில் பலரை இணைத்து ஏமாற்றி ரூ. 6,860,000 மோசடி செய்யப்பட்டதாகவும், மோசடி செய்யப்பட்ட தொகையில் ரூ. 500,000 ஐ சந்தேகநபர் தனது வங்கிக்கணக்கில் வரவு வைத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

வெலிபென்னவைச் சேர்ந்த 31 வயதுடைய சந்தேகநபரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து கணினி குற்ற புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இலங்கையின் தென்மேற்கு பகுதியில் தொடர்ந்தும் நிலவும் வளிமண்டல தளம்பல் நிலை - வழங்கப்பட்டுள்ள எச்சரிக்கை
ஆனந்தியை கொலை செய்ய துளசி செய்த அதிர்ச்சி செயல், தப்பிப்பாரா?... சிங்கப்பெண்ணே சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
புதிய வெப் தொடரை இயக்கும் மகாநதி சீரியல் இயக்குனர் பிரவீன் பென்னட்... யாரெல்லாம் நடிக்கிறாங்க பாருங்க Cineulagam
என்னை எப்படி அப்படி கூறலாம், கண்டிப்பாக புகார் அளிப்பேன்... சீரியல் நடிகை கம்பம் மீனா காட்டம் Cineulagam