டொலர்களை தருவதாக கூறி வர்த்தகரிடம் கோடி ரூபா மோசடி
அரசியல்வாதிகள் மற்றும் முக்கிய பிரமுகர்களில் பெயர்களை பயன்படுத்தி, வர்த்தகர் ஒருவரிடம் ஒரு கோடி ரூபாவுக்கும் மேல் மோசடி செய்த இரண்டு சந்தேக நபர்களை குற்றவியல் விசாரணை திணைக்களம் கைது செய்துள்ளது.
அமெரிக்க டொலர் உட்பட வெளிநாட்டு நாணயத் தாள்களை பெற்று தருவதாக கூறி, இந்த சந்தேகநபர்கள் பணத்தை மோசடி செய்துள்ளதாக தெரியவருகிறது.
வாகன உதிரி பாகங்களை இறக்குமதி செய்யும் வர்த்தகரிடமே இந்த சந்தேகநபர்கள் பணத்தை மோசடி செய்துள்ளனர்.
சந்தேகநபர்கள் புதிய தொழிநுட்பத்தின் ஊடாக இங்கிலாந்தில் உள்ள மற்றுமொரு நபரை சம்பந்தப்படுத்தி, இந்த மோசடியை செய்துள்ளதாக தெரியவந்துள்ளது என குற்றவியல் விசாரணை திணைக்களத்தின் அதிகாரிகள் கூறியுள்ளனர்.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர்கள் இன்று கல்கிஸ்சை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்ப்படுத்தப்படவுள்ளனர்.
பிக்பாஸ் 10ல் குமரன் ரூ. 5 லட்சம் எடுத்துக்கொண்டு வெளியே வந்ததற்கான காரணம் என்ன தெரியுமா? Cineulagam
உக்ரைனுக்கு இன்னொரு பேரிடி... புடினுடன் இரகசிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்த ட்ரம்ப் News Lankasri