கொழும்பில் உயிரிழந்த மருமகனின் மாமியார் செய்த மோசடி
தெஹிவளையில் உயிரிழந்த மருமகனின் 10 வருட ஓய்வூதிய பணமான 25 லட்சம் ரூபாவை பெற்று வந்த மாமியார் ஒருவர் தொடர்பில் செய்தி வெளியாகியுள்ளது.
சட்டவிரோதமாக இந்த பணத்தை பெற்ற மாமியார் மற்றும் அவருக்கு உதவி கிராம சேகரை விடுவிப்பதற்கு நடவடிக்கை மேற்கொண்ட தெஹிவளை பிரதேச செயலாளர் மற்றும் கணக்காளர் உட்பட பலர் தொடர்பில் விசாரணைகள் ஆரமபிக்கப்பட்டுள்ளதாக உள்நாட்டலுவல்கள் அமைச்சு தெரிவித்துள்ளது.
குறித்த பெண் சட்டவிரோதமாக ஓய்வூதியத்தை பெற்றுக் கொள்வதாக தெஹிவளை பிரதேச செயலாளருக்கு கிடைத்த முறைப்பாட்டிற்கமைய அந்த பிரதேச செயலக கணக்காளர் தலைமையினால் விசாரணை குழு விசாரரண மேற்கொண்டுள்ளது.
விசாரணைகளில் பின்னர் கிராம சேவகருக்கு தெரியாமலேயே இந்த மோசடி இடம்பெற்று வந்துள்ளதாக கணக்காளர் பொய்யான தகவல் வழங்கியுள்ளார்.
தெஹிவளை பிரதேச செயலாளர் பிரிவை சேர்ந்த குறித்த ஓய்வு பெற்றவர் 2006ஆம் ஆண்டு உயிரிழந்ததாகவும், பின்னர் அவரது மனைவியின் தாயார், தானே உயிரிழந்தவரின் மனைவி என கூறி ஓய்வூதியம் பெற்றுள்ளார். அதற்கு அவசியமான சான்றிதழ்கள் அனைத்தையும் குறித்த கிராம சேவகரே தயாரித்து கொடுத்துள்ளார்.
ஒய்வு பெற்றவரின் மனைவி 2003ஆம் ஆண்டு உயிரிழந்துள்ளதாக தெரியவந்துள்ள நிலையில் குறித்த பெண் சட்டவிரோதமாக 25 லட்சம் ரூபாயை பெற்றுள்ளார் என தெரியவந்துள்ளது.