வெளிநாடு ஒன்றில் பணயக்கைதிகளாக உள்ள இலங்கையர்கள்: விசாரணைகளில் வெளிவந்த தகவல்
நேபாளத்தில் (Nepal) இலங்கையர்களை பணயக் கைதிகளாக வைத்திருந்த பாகிஸ்தானியர்களிடம் மேற்கொண்ட விசாரணைகளில் வெளிநாட்டு வேலைவாய்ப்பு தொடர்பிலான மோசடி இடம்பெற்றுள்ளதாக நேபாள(Nepal) பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வேலைக்காக கனடா, ருமேனியா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் வேலை வாங்கித் தருவதாகப் பொய்யான வாக்குறுதிகளை அளித்து இலங்கை பிரஜைகள் நால்வரும் பணயக் கைதிகளாக பிடித்துச் செல்லப்பட்டுள்ளதாக அவர்கள் கூறியுள்ளனர்.
நேபாளத்தில் (Nepal) இலங்கையர்களை பணயக் கைதிகளாக வைத்திருந்த பாகிஸ்தானியர்கள் நால்வரை கடந்த 4ஆம் திகதி அந்நாட்டு பொலிஸார் கைது செய்திருந்தனர்.
கொலை மிரட்டல்
நேபாள பொலிஸின் காத்மாண்டு நகர குற்றப் புலனாய்வுப் பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்த கைது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
42 வயதுக்கும் 62 வயதுக்கும் இடைப்பட்ட நான்கு பாகிஸ்தானிய பிரஜைகள் இவ்வாறு கைது செய்ப்பட்டுள்ளனர்.
குறித்த இலங்கையர்கள் பாகிஸ்தான் பிரஜைகளால் தாக்கப்பட்டு, சித்திரவதை செய்யப்பட்டு, கொலை மிரட்டலுக்கு உள்ளானதாகவும் பொலிஸ் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |