கோவிட் நிலையங்களில் மோசடி: யாழ். சுகாதார பணிமனை கணக்காளருக்கு இடமாற்றம்
யாழ். கோவிட் இடைத் தங்கல் நிலையங்களில் மோசடி இடம்பெற்றதாக குற்றச்சாட்டுகள் எழுந்த நிலையில், யாழ். பிராந்திய சுகாதார பணிமனையில் கடமையாற்றும் கணக்காளர் தர்மசீலனுக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்தார்.
யாழ்ப்பாணத்தில் கோவிட் இக்கட்டான காலகட்டத்தில் கோவிட்
இடைத்தங்கல் நிலையங்கள் அமைக்கப்பட்டது.
மருதங்கேணி, நாவற்குழி மற்றும் வட்டுக்கோட்டை பகுதிகளில் அமைக்கப்பட்ட கோவிட் இடைத்தங்கல் நிலையங்கள் அகற்றப்படும்போது அதிலிருந்த பல இலட்சம் ரூபா பொருட்கள் வரவுப் புத்தகத்தில் பதிவேற்றம் செய்யப்படாமல் மாயமாகி போனது.
குறித்த விடயம் தொடர்பில் சமூக ஊடகங்கள் மற்றும் அச்சு ஊடகங்களில் செய்திகள் வெளிவந்த நிலையில், குறித்த விடயம் தொடர்பில் பிரதமர் அலுவலகம் வட மாகாண ஆளுநரை விசாரணை செய்யுமாறு கோரிக்கை விடுக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில் விசாரணைகளைத் தடையின்றி மேற்கொள்வதற்காக யாழ். பிராந்திய சுகாதார
பணிமனையின் கடமையாற்றும் கணக்காளருக்கு இடமாற்றம் வழங்கப்பட்டுள்ளதோடு,
விரைவில் அவரது இடத்துக்குப் பெண் கணக்காளர் ஒருவர் நியமிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது.
புதிய அமைதி பேச்சுவார்த்தையை முன்மொழிந்துள்ள ஈரான்., நம்பிக்கையின்மையை வெளிப்படுத்திய அமீரகம் News Lankasri
லண்டனை உலுக்கிய சம்பவத்தில் புதிய திருப்பம்... தாக்குதலில் ஈடுபட்டவர் மீது கொலை முயற்சி வழக்கு News Lankasri