தமிழ் நாட்டில் உள்ள ஈழ ஆதரவாளர்களிடம் முன்வைக்கப்பட்டுள்ள முக்கிய வேண்டுகோள்
தமிழ் நாட்டில் உள்ள ஈழ ஆதரவாளர்களிடம் பிரான்சிலுள்ள மனித உரிமை செயற்பாட்டாளர் கஜன் முக்கிய வேண்டுகோளொன்றை முன்வைத்துள்ளார்.
இது தொடர்பில் அவர் மேலும் குறிப்பிடுகையில்,
2009 விடுதலைப் போராட்டம், தமிழீழ விடுதலைப் புலிகளின் ஆயுத மௌனிப்பிற்கு பின்பு 11 ஆண்டு காலமாக சிதைந்து போயிருக்கின்றது.
இந்த நேரத்தில் தமிழகத்திலிருந்து வருகின்ற ஒவ்வொரு பதிவுகளும், ஈழத் தமிழர்களாகிய எங்களுக்கும் தமிழீழ விடுதலைப் போராட்டத்திலிருந்து போராடிய எங்கள் அனைவருக்கும் மிகவும் வேதனையை தந்துள்ளது.
தயவு செய்து தமிழ் நாட்டிலிருக்கும் கட்சித் தலைவர்கள் மற்றும் ஈழ விடுதலைக்காக குரல் கொடுக்கும் அனைவரும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
உங்களிடம் வந்து யாரேனும் நாங்கள் ஈழத் தமிழர்கள், நாங்கள் புலம்பெயர் நாட்டில் இருக்கின்றோம், அகதி முகாம்களில் இருக்கிறோம் என்று உங்களிடம் கேள்வி கேட்டால் அதிலும் குறிப்பாக அரசியல் சார்ந்த கேள்விகளுக்கு பதிலளிக்க வேண்டாம் என குறிப்பிட்டுள்ளார்.

சீனாவிற்கு புதிய அச்சுறுத்தல்., இந்தியாவைத் தொடர்ந்து P-8 Poseidon விமானத்தை வாங்கிய நாடு News Lankasri

வீட்டிலேயே கார்த்திகா கழுத்தில் தாலி கட்ட சென்ற சேரன், சந்தோஷத்தில் குடும்பம், ஆனால்?- அய்யனார் துணை புரொமோ Cineulagam
