கோறளைப்பற்று மத்தியில் பதினான்கு பேருக்கு கோவிட் தொற்று உறுதி
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் இன்று இடம்பெற்ற அன்டிஜன் பரிசோதனையில் ஆறு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கோவிட் தொற்றுக்குள்ளான நபர்களுடன் தொடர்புடையவர்கள், நாற்பத்தி எட்டு நபர்களுக்கு அன்டிஜன் பரிசோதனை மற்றும் 81 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகளும் இன்று இடம்பெற்றுள்ளன.
இதில் அன்டிஜன் பரிசோதனையில் ஆறு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.அத்தோடு வாழைச்சேனை 04 வட்டாரத்தில் கடந்த சனிக்கிழமை எடுக்கப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையின் முடிவு இன்று வெளியானதில் எட்டு பேருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இன்று இடம்பெற்ற பரிசோதனை நிகழ்வில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் எம்.எஸ்.நௌபர், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், அலுவலக உத்தியோகத்தர்கள், வாழைச்சேனை பொலிஸார் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.
கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவில் கோவிட் வைரஸ்
தொற்றாளர்கள் அதிகரித்து வரும் நிலையில், சுகாதார வைத்திய அதிகாரிகளால்
பி.சி.ஆர். பரிசோதனைகள் மற்றும் அன்டிஜன் பரிசோதனைகள் தொடர்ச்சியாக
மட்டக்களப்பு மாவட்ட பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி
நாகலிங்கம் மயூரன் வழிகாட்டலில் கோறளைப்பற்று மத்தி சுகாதார வைத்திய அதிகாரி
எஸ்.ரி.நஜீப்காப் தலைமையில் இடம்பெற்று வருகின்றமை குறிப்பிடத்தக்கது.




எல்லாமே எல்லை மீறிப்போய்விட்டது... 2026ஆம் ஆண்டு குறித்த வங்கா பாபாவின் மற்றொரு எச்சரிக்கை News Lankasri
அப்பாவுக்கு பிடிக்கும்... இலங்கை பாடகர் வாகீசனின் பாடலுக்கு நாட்டியம் ஆடி இந்திரஜா போட்ட பதிவு! Manithan
யாருக்கும் தெரியாமல் மயிலை பார்க்க சென்ற மீனா, அவரது அம்மா சொன்ன விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 Cineulagam
முத்துவிடம் சிக்கிய க்ரிஷ் கடத்தல்காரர்கள், அடுத்து அருண் செய்த காரியம்... சிறகடிக்க ஆசை சீரியல் எபிசோட் Cineulagam