யாழ் ராணி தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டு நான்கு வருடம் நிறைவு
யாழ் ராணி தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டு நேற்று (22) நான்கு ஆண்டுகள் நிறைவடைந்துள்ளதை முன்னிட்டு, அந்தப் தொடருந்தில் தினந்தோறும் பயணம் செய்யும் அரச உத்தியோகத்தர்களின் ஏற்பாட்டில் 4ஆம் ஆண்டு நிறைவு விழா கொண்டாடப்பட்டது.
குறித்த நிகழ்வானது கிளிநொச்சி தொடருந்து நிலையத்தில் நேற்று பி.ப 4.00மணிக்கு இடம்பெற்றது.
பல அரச உத்தியோகத்தர்கள்
குறித்த நிகழ்வில் கிளிநொச்சி மாவட்ட அரசாங்கதிபர் எஸ்.முரளிதரன், தொடருந்து திணைக்களத்தின் வடமார்க்கத்திற்கான மேற்பார்வையாளர் வி.எம்.என். நிரந்த விசுந்தர ஆகியோர் விருந்தினராக கலந்து கொண்டனர்.

யாழ்.மாவட்டத்திலிருந்து வெளிமாவட்டங்களுக்கு கடமைகளுக்காக செல்லும் பல அரச உத்தியோகத்தர்களுக்கு பொருளாதார நிலைமையில் பிரயாண செலவை குறித்த தொடருந்து சேவையில் ஈடுபடுவதன் மூலம் குறைக்கின்றது.


