தாயுடன் உறங்கிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுமி திடீரென உயிரிழப்பு
ஹொரணை - திகேனபுர பகுதியில் உறங்கிக்கொண்டிருந்த நான்கு வயது சிறுமியொருவர் நேற்று பிற்பகல் திடீரென உயிரிழந்துள்ளதாக ஹொரணை தலைமையக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
ஹொரணை, திகேனபுர பகுதியில் வசித்து வந்த சசுகி அனன்யா செசாந்தி என்ற நான்கு வயது சிறுமியே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
குறித்த சிறுமி வழமை போன்று தனது தாயுடன் உறங்கிய நிலையில்,சிறுநீர் கழித்தமையினால் உடைகளை மாற்றத்தயாரானபோது, சிறுமியின் உடல் உயிரற்ற நிலையில் இருப்பதை உணர்ந்து தனது கணவருக்கு தொலைபேசியில் தகவல் தெரிவித்துள்ளார்.

பிரேத பரிசோதனை முன்னெடுப்பு
இதனை தொடர்ந்து வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்ட சிறுமியை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் உயிரிழந்துவிட்டதாக தெரிவித்துள்ளனர்.
இந்நிலையில், சிறுமியின் பிரேத பரிசோதனை இன்று (12.09.2023) ஹொரணை ஆதார வைத்தியசாலையில் மரண விசாரணை நீதிபதி சுசுமேதா குணவர்தன முன்னிலையில் நடைபெறவுள்ளது.
மேலும், ஹொரணை தலைமையக பொலிஸ் நிலையத்தின் பதில் கட்டளைத் தளபதி பிரதான பொலிஸ் பரிசோதகர் பராக்கிரம குணரத்னவின் பணிப்புரையின் பேரில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றன.
நிலா மீது கடும் வருத்தத்தில் இருக்கும் சோழனுக்கு ஷாக் கொடுத்த ஒரு சம்பவம்... அய்யனார் துணை எபிசோட் Cineulagam
இனத்தில் அடிப்படையில் வீடு வாடகைக்கு விட மறுக்கும் ஜேர்மானியர்கள்: கவனம் ஈர்த்துள்ள ஒரு வழக்கு News Lankasri
கும்ப ராசியில் புதன் பெயர்ச்சி: பெப்ரவரியில் இந்த 3 ராசிக்காரங்களுக்கு ட்ரிபிள் ஜாக்பாட் தான்! Manithan