ஆழ்கடலுக்கு மீன்பிடிக்க சென்ற நால்வர் மாயம்!
வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து கடந்த மாதம் 26ம் திகதி ஆழ்கடலுக்கு மீன்பிடிக்கச் சென்ற நான்கு மீனவர்களை காணவில்லையென முறைப்பாடு செய்ய்ப்பட்டுள்ளது.
சம்பவம் தொடர்பில் படகின் உரிமையாளர் எம்.எஸ்.அன்வர் (M.S.Anwar) வாழைச்சேனை பொலிஸ் நிலையத்தில் வெள்ளிக்கிழமை முறைப்பாடு செய்துள்ளதாக வாழைச்சேனை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தனஞ்ஜய பெரமுன (Thanaja Peramuna) தெரிவித்துள்ளார்.
நீலநிற படகில் கடந்த செப்டம்பர் மாதம் 26ம் திகதி வாழைச்சேனை துறைமுகத்திலிருந்து புறப்பட்டுச் சென்ற குறித்த படகிலிருந்து இன்று சனிக்கிழமை வரை எந்தவித அறிவித்தலும் தமக்கு கிடைக்கவில்லை என்று படகின் உரிமையாளர் தனது முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
குறித்த படகில் வாழைச்சேனையைச் சேர்ந்த எம்.வி.ரிஸ்கான் (M.V.Riskhan), எம்.எச்.முஹம்மட் (M.H. Muhammad), ஏ.எம்.றியாழ் (A.M. Riyaz), கே.எம்.ஹைதர் (K. M. Haider) ஆகியோர் சென்ற நிலையில் காணாமல்போயுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த படகு தொடர்பான தகவல்கள் எதுவும் கிடைக்கும் பட்சத்தில் வாழைச்சேனை பொலிஸ் நிலைய தொலைபேசி இலக்கமான 065225709 என்ற இலக்கத்துடன் அல்லது படகு உரிமையாளரின் தொலைபேசி இலக்கமான 0779581915 இலக்கத்திற்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றது.










அரசாங்கத்திற்கு நெருக்கடியை கொடுத்துள்ள செம்மணி மனிதப் புதைகுழி! 4 மணி நேரம் முன்

அந்த முடிவுக்கு வரவில்லை என்றால்... இந்தியா பேரிழப்பை சந்திக்கும்: அமெரிக்கா அடுத்த மிரட்டல் News Lankasri

குணசேகரன் கேங்குக்கு விபூதி அடிக்கப்பட்டு கடத்தப்படுகிறாரா தர்ஷன், ஜனனி பிளான் என்ன.. எதிர்நீச்சல் தொடர்கிறது புரொமோ Cineulagam
