சஜித்துடன் இணைந்த ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன எம்.பிகள்..! வெளியான புதிய தகவல்
சஜித் பிரேமதாச தலைமையிலான ஐக்கிய மக்கள் சக்தியில் தாம், இணைந்ததாகக் கூறப்படுவதை ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நாடளுமன்ற உறுப்பினர்களான சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே மற்றும் ஜெயரத்ன ஹேரத் ஆகியோர் மறுத்துள்ளனர்.
சஜித்தின் கூட்டணியில் இணைவு
முன்னாள் அமைச்சர்களான அனுர பிரியதர்ஷன யாப்பா மற்றும் சுதர்ஷினி பெர்னாண்டோபுள்ளே உள்ளிட்ட நாடாளுமன்ற உறுப்பினர்கள் நேற்று சஜித்தின் கூட்டணியில் இணைந்ததாக தகவல்கள் வெளியாகியிருந்தன.

இவர்கள் நேற்றைய தினம் (15.11.2022) எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவை சந்தித்து கூட்டமைப்பில் இணைந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
பெர்னாண்டோபுள்ளேவின் கலந்துரையாடல்
எவ்வாறாயினும், வரவு செலவுத் திட்டத்தின் போது எதிர்க்கட்சிகள் எடுக்கும் நிலைப்பாடு குறித்து கலந்துரையாடுவதற்காக பிரேமதாசவை சந்தித்ததாக பெர்னாண்டோபுள்ளே ஊடக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

அதேநேரம் தாம் தொடர்ந்தும் சுயாதீன உறுப்பினராக நாடாளுமன்றில் செயற்படுவதாக
ஜெயரத்ன ஹேரத் குறிப்பிட்டுள்ளார்.