திடீரென சரிந்து விழுந்த தொலைத்தொடர்பு கோபுரம்! ஐவர் படுகாயம்(Video)
திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச சபைக்கு உட்பட்ட தொலைத்தொடர்பு கோபுரம் சரிந்து விழுந்ததில் ஐவர் படுகாயமடைந்துள்ளதாக தெரியவருகின்றது.
பலத்த காற்றின் காரணமாக கந்தளாயில் நிர்மானிக்கப்பட்டிருந்த எஸ்.எல்.டி மொபிடல் நிறுவனத்துக்கு சொந்தமான தொலைத்தொடர்பு கோபுரம் இன்று(04.07.2023) முற்பகல் சரிந்து விழுந்துள்ளது.
ஐவர் படுகாயம்
இதன்போது அருகில் இருந்த தபால் கட்டடத்தின் மேல் சரிந்து விழுந்ததால் கடமையில் ஈடுபட்டிருந்த ஐவர் படுகாயமடைந்துள்ளனர்.
இவ்வாறு காயமடைந்தவர்கள், கந்தளாய் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக கந்தளாய் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
மேலதிக விபரம் கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் குறித்த பகுதியில் சில தொலைத்தொடர்பு சேவை வசதிகள் துண்டிக்கப்பட்டுள்ளதாகவும் தெரியவருகின்றது.
மேலதிக தகவல்-பதுர்தீன் சியானா
புத்தளம்
இதேவேளை புத்தளம் மாவட்டத்தில் காற்றின் வேகம் அதிகரித்துக் காணப்படுவதினால் பாதுகாப்பாக செயற்படுமாறு புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
இந்த நிலையில் பலத்த காற்று வீசியதினால் புத்தளம் நகரசபைக் கடைத் தொகுதியின் இரண்டு கடைகளின் கூரைத் தகடுகள் அல்லூண்டு சென்றுள்ளது.
இதனையடுத்து புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் மற்றும் புத்தளம் நகரசபை ஊழியர்கள் இணைந்து திருத்தப்பணிகளை முன்னெடுத்து வருகின்றனர்.
செய்தி-அஷார்























நல்லூர் ஸ்ரீ கந்தசுவாமி கோவில் 24ம் நாள் திருவிழா





கூலி பட வெற்றியால் கைதி 2 படத்திற்காக லோகேஷ் கனகராஜ் சம்பளத்தை உயர்த்திவிட்டாரா?... இத்தனை கோடியா? Cineulagam

குணசேகரனுக்கே செக் வைத்த தர்ஷன், ஜனனி கொடுத்த ஐடியா.. எதிர்நீச்சல் தொடர்கிறது சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam

திருப்பதி வெங்கடேஸ்வரர் அருள்தான் காரணம் - 121 கிலோ தங்கத்தை காணிக்கையாக செலுத்திய NRI News Lankasri

Fact Check: பூனையைக் கவ்விச் சென்ற ராட்சத பாம்பு! கடைசியில் நடந்தது என்ன? உண்மை பின்னணி இதோ Manithan

பிரம்மாண்டமாக தயாராகும் அல்லு அர்ஜுன்-அட்லீ படத்தில் சிறப்பு வேடத்தில் பிரபல நடிகர்... யார் தெரியுமா? Cineulagam
