மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை வைத்தியர் உட்பட நால்வருக்கு கோவிட் தொற்று உறுதி
திருகோணமலை - மஹதிவுல்வெவ பிரதேச வைத்தியசாலை வைத்தியர் உட்பட நால்வருக்கு கோவிட் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
வைத்தியர் மற்றும் அம்பியலன்ஸ் வண்டி சாரதிக்குக் காய்ச்சல், தடிமல் இருந்தமையால் இன்று (28) அன்டிஜன் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
இதனையடுத்து இருவருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டதையடுத்து மற்றைய ஊழியர்களுக்கும் அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.
இதேவேளை குறித்த வைத்தியசாலையில் கடமையாற்றும் வைத்தியர்,அம்பியுலன்ஸ் சாரதி, மருந்தாளர், சிற்றூழியர் ஆகிய நால்வருக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாகவும் வைத்தியசாலையின் பேச்சாளரொருவர் தெரிவித்தார்.
அத்துடன் குறித்த நால்வரும் அதை வைத்தியசாலையில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர். எதிர்வரும் 07/02/திகதி மாணவர்களுக்கான க.பொ.த.உயர்தரப் பரீட்சை நாடளாவிய ரீதியில் ஆரம்பமாக இருக்கும் நிலையில் இயல்பு நிலை பாதிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இதேவேளைத் திருகோணமலை பொது வைத்தியசாலையில் நேற்று (27) மேற்கொள்ளப்பட்ட 05 பி.சி.ஆர் மற்றும் 100 அன்டிஜன் பரிசோதனைகளில் 13 ஆண்கள் 04 பெண்கள் அடங்கலாக, 17புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட 05 பி.சி.ஆர், 20 அன்டிஜன் பரிசோதனைகளில் 01 ஆண் 01 பெண் உட்பட 02 நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். கந்தளாய் சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் மேற்கொள்ளப்பட்ட 37 அன்டிஜன் பரிசோதனைகளின் அடிப்படையில் 09 ஆண்கள் 08 பென்கள் என 17 புதிய தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 01 ஆண், 02 பெண்கள் அடங்கலாக 03 புதிய நோயாளர்களும் அடையாளம் காணப்பட்டுள்ளனர். புல்மோட்டை ஆதார வைத்தியசாலையில் மேற்கொள்ளப்பட்ட 30 அன்டிஜன் பரிசோதனையில் 08ஆண்கள் 02 பெண்களுமாக 10புதிய நோயாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
அத்துடன் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் 01 மரணம் பதிவாகியுள்ளது . இதற்கமைவாக திருகோணமலை மாவட்டத்தில் 24 மணிநேரத்தில் மேற்கொள்ளப்பட்ட பரிசோதனையில் 32" ஆண்கள் 17" பெண்கள் அடங்கலாக "49" புதிய நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளனர்.
இதில்
7579 ஆண்கள்,
6875 பெண்கள் அடங்கலாக
"14454" நோயாளர்கள் இனம் காணப்பட்டுள்ளதுடன் மொத்த மரண எண்ணிக்கையானது
407ஆக உயர்வடைந்துள்ளது .

இயக்கச்சியில் அமைந்துள்ள ReeCha organic Farm இல் ஒரு குறுகிய பொழுது பாரிய மாற்றத்தை தங்கள் வாழ்க்கையில் ஏற்படுத்த ஒவ்வொருவரையும் அன்போடு அழைக்கின்றோம்.

கனடாவில் வசிக்கும் தமிழ்ப்பெண் மீது பொலிசார் வழக்குப்பதிவு! என் உயிரை கூட தருவேன் என ஆவேச பதிவு News Lankasri

பாரதி கண்ணம்மா சீரியல் புகழ் அருண் தனது காதலியுடன் எடுத்துக்கொண்ட புகைப்படம்- முதன்முறையாக வெளியான போட்டோ Cineulagam

சிக்சர் அடிக்க பார்த்த இந்திய கேப்டன் தினேஷ் கார்த்திக்! விழுந்து புரண்டு கேட்ச் செய்த வீரரின் வீடியோ News Lankasri
