கந்தளாயில் உள்நாட்டு துப்பாக்கியுடன் நான்கு பேர் கைது
திருகோணமலை - பேரமடு காட்டுப்பகுதியில் வைத்து சட்டவிரோதமாக அனுமதியின்றி உள்நாட்டு துப்பாக்கிகளை வைத்திருந்த நான்கு பேரை நேற்றிரவு(29) கைது செய்ததாக பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
கந்தளாய் அக்போகம பகுதியைச் சேர்ந்த இருவரையும், கந்தளாய் அக்போபுர பகுதியைச் சேர்ந்த இருவரையும் கைது செய்துள்ளதாக வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இரகசிய தகவலால் சிக்கிய நபர்கள்
கந்தளாய் பிராந்திய வனஜீவராசி திணைக்கள அதிகாரிகளுக்கு கிடைத்த இரகசிய தகவலின் அடிப்படையிலேயே சந்தேக நபர்களை கைது செய்துள்ளதாக வனஜீவராசி திணைக்கள அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்களிடமிருந்து உள்நாட்டு துப்பாக்கி, கத்தி,துப்பாக்கி குண்டுகள், மருந்துகள், மற்றும் லைட் போன்றனவும் கைப்பற்றியுள்ளதாகவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.
சந்தேகநபர்களை தடுத்து வைத்து விசாரணைகள் மேற்கொண்டு வரப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.



253 பந்துகளில் 266 ரன் விளாசிய வீரர்! 228 ரன் குவித்த கேப்டன்..ஒரே இன்னிங்சில் இருவர் இரட்டைசதம் News Lankasri

திருமணத்திற்கு ஒப்புக்கொண்ட முத்துவை அசிங்கப்படுத்தும் அருண்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
